
“தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.” – எபே 2:4-5
வேதத்திலுள்ள அழகான காரியங்களில் ஒன்று ‘நாம் பாவிகளாய் இருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்தார் (ரோமர் 5:8) என்பது’. அவருடைய அன்புக்கு நாம் தகுதியாகும் வரை நாம் காத்திருக்கவில்லை. நிபந்தனையின்றி அவர் நம்மை நேசிக்கிறார். உண்மையாக கூற வேண்டுமென்றால். நம்மில் அனேகருக்கு அதைப் புரிந்து கொள்வது கடினமாகும். ஏனென்றால் வாழ்க்கையில் நாம் அனைத்தையும் சம்பாதிக்க பழக்கப்பட்டு இருக்கின்றோம்.
நம்மேல் அவர் கொண்டிருக்கும் அன்பின் நிமித்தமாக தம்முடைய அன்பை நம்மேல் தாராளமாக ஊற்றினார். இது புரட்சிகரமான அன்பு. தம்மையே கொடுக்கும் உண்மையான அன்பு. ஏனென்றால், இதை விட ஏதாவது குறைவானதை செய்வதிலே அது ஒருபோதும் திருப்தியடைவதில்லை.
தேவனுடைய நிபந்தனையற்ற அன்பே நம்மை அவரிடமாக இழுக்கிறது. அவரின் ஆச்சரியமான கிருபை நம் பாவத்தை அழித்து விடுகிறது. அவருடைய உண்மையுள்ள தியாகமானது அவரது பிரசன்னத்திற்குள்ளாக நாம் நுழைய ஒரு வழியை உண்டாக்குகிறது. அவரது அன்பு ஒருபோதும் விட்டு விடாது, ஒருபோதும் உங்களை விட்டு சென்று விடாது. நீங்கள் எப்போதெல்லாம் மன சோர்வடைந்து காணப்படுகிறீர்களோ அப்போதெல்லாம் தேவன் உங்கள் மேல் கொண்டிருக்கும் அந்த மிகப் பெரிய அன்பை நினைத்துக் கொள்ளுங்கள்.
ஜெபம்
தேவனே, உம் அன்பு என்னை மேற்கொள்கிறது. நான் அதை உணராமலிருந்தாலும், உம் அன்பு என்னை ஒருபோதும் விட்டு விடுகிறதில்லை என்று அறிந்திருக்கிறேன். நீர் உம்முடைய அனைத்தையும் எனக்காக கொடுத்தீர். நீர் என்னை நேசிக்கிறீர் என்பதை எள்ளளவும் சந்தேகமின்றி அறிந்திருக்கிறேன்.