
“மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.” – ரோமர் 5:5
தேவ அன்பைப் போன்று மனித அன்பு நிபந்தனையற்றதாக இருப்பது முடியாததொன்றாகும். ஆனால் இயேசு கிறிஸ்துவின் விசுவாசிகளாக, தேவ அன்பு நமக்குள்ளே இருக்கிறது. எந்தவித நிபந்தனையுமின்றி தாராளமாக அந்த அன்பு பாய்ந்து செல்ல நாம் அனுமதிக்கலாம். நம் அன்பு மாறி விடும். ஆனால் தேவ அன்பு மாறாது. நம் அன்பு ஒரு முடிவுக்கு வந்து விடும், ஆனால் தேவ அன்பு அப்படிப்பட்டதல்ல.
சில சமயங்களிலே, ஒருவரை என்னுடைய பெலத்தால் நேசிக்கா விட்டாலும், தேவ அன்பால் என்னால் நேசிக்க முடிகிறது என்பதைக் கண்டேன். உண்மையான தேவ அன்பு உணர்ச்சியை சார்ந்ததாக இருக்கிறதில்லை. அது ஒரு தீர்மாணத்தை சார்ந்திருக்கிறது. அது அந்த நபர் அதற்கு தகுதியாய் இருக்கிறாரா என்பதை சார்ந்து இருக்கிறதில்லை. அவர்கள் அதற்கு தகுந்தவர்கள் தானா என்று பார்க்காமலே நேசிப்பது, நம்மை முற்றிலுமாக விடுதலையாக்குகின்றதாக இருக்கிறது.
மனித அன்பு உணர்ச்சிகளை சார்ந்திருக்கிறது. அது மக்களை நேசிக்கின்றது. ஏனென்றால் அவர்கள் நம்மிடம் நல்லவர்களாக இருந்திருக்கின்றனர் அல்லது நம்மை முதலாவதாக நேசித்திருக்கின்றனர்.
தேவனுடைய அன்பு முற்றிலும் வித்தியாசமானது. அது தேவனைத் தவிர வேறு எதையும் சார்ந்திருக்கிறதில்லை. கிறிஸ்துவை நாம் நம்முடைய இரட்சகராக ஏற்றுக் கொண்ட போது, பரிசுத்த ஆவியானவரால் தேவ அன்பு நம் இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறது. இன்றே பிறரிடம் அந்த தேவ அன்பை ஊற்றுங்கள்.
ஜெபம்
தேவனே, என்னுடைய அன்பு தீர்ந்து விடும். ஆனால் உம் அன்பு ஒருபோதும் தீராது. பிறர் அதற்கு தகுதியானவர்தானா என்று கவலைப் படாமல், அவர்களிடம் உம் அன்பைக் காட்ட, நான் தொடர்ந்து உம் அன்பிலிருந்து எடுத்துக் கொள்கிறேன்.