“சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.” – 2 தீமோ 4:2
நான் ஊழியத்தின் நிமித்தம் அடிக்கடி பிரயாணப்படுவதால், விடுதிகளிலே தங்க வேண்டியிருக்கும். நான் என் விடுதி அறையில் இருக்கும் போது எவரும் என்னை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக ‘தொந்தரவு செய்யாதே’ என்ற அட்டையை கதவின் வெளியே தொங்க விடுவதுண்டு. இப்படிப்பட்ட அட்டையை தொங்க விடுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதே, ஆனால் என் வாழ்க்கையிலே அதை மாட்டிக் கொள்வது ஏற்புடையது அல்ல.
தேவன் நம் கால அட்டவனையின் படியோ அல்லது நமக்கு வசதியான பிரகாரமோ காரியங்களை செய்கிறதில்லை என்பதை
கவனித்திருக்கின்றீர்களா? பவுல், தேவனுடைய ஊழியக்காரனாக, சுவிஷேசத்தின் பிரதிநிதியாக தீமோத்தேயுவிடம், அவனுக்கு வசதியாக இருந்தாலும், இராவிட்டாலும் அவனுடைய கடமைகளை நிறைவேற்ற வேண்டுமென்று கூறுகிறார்.
இன்று நம்மைப் போன்றே தீமோத்தேயுவும் வசதிக்கு அடிமையாக இருந்திருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன். அவன் அதைக் கேட்க வேண்டியிருந்திருக்குமேயென்றால் நாமும் அடிக்கடி அதை கேட்க வேண்டுமென்று உறுதியாக நம்புகிறேன்.
மக்கள் நம் வசதிக்கு ஊறுவிளைவிப்பார்கள் என்று பயந்து நம் இருதயத்திற்கு மேல் ‘தொந்தரவு செய்யாதே’ அட்டையை போட்டுக் கொள்வது சுலபமானதே, ஆனால் அப்படி நாம் செய்யும் போது பல சந்தர்ப்பங்களை இழந்து விட நேரிடும். நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று தேவன் நம்மிடம் கூறுகிறாரோ, அதை செய்யும் போது நாம் சந்திக்க நேரிடும் எத்தகைய வசதியின்மையும், கஷ்டமும் சகிக்க தகுந்ததே என்பதை நாம் நினைத்துக் கொள்ள வேண்டும். நாம் அவருக்கு கீழ்படியும் போது அவர் எப்போதுமே அவருடைய சித்தத்தை நாம் செய்து முடிக்க ஒரு வழியை ஏற்படுத்துவார்.
ஜெபம்
தேவனே, என் இருதயத்தின் மேல் நான் போட்டிருக்கும் ‘தொந்தரவு செய்யாதே’ அட்டையை நீக்கி விட தெரிந்து கொள்கிறேன். எனக்கு வசதியின்மையாக அது தோன்றினாலும், நான் உமக்கு கீழ்படிந்து, நான் செய்யும் படி நீர் எனக்கு சொல்வதை செய்ய விரும்புகிறேன்.