நட்பு நம்மை தைரியப்படுத்துகிறது

நட்பு நம்மை தைரியப்படுத்துகிறது

ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். (எபிரெயர் 4:16)

நாம் தேவனுடனான நட்பைப் புரிந்துகொண்டு, அவருடைய நண்பர்களாக நம்மைப் பார்க்கத் தொடங்கும் போது, நம்முடைய ஜெபங்கள் அதிகமாய், ஆவியால் வழிநடத்தப்பட்டதாகவும், அதிக விசுவாசம் நிறைந்ததாகவும், மிகவும் தைரியமானதாகவும் மாறும். இயேசு லூக்கா 11 இல் அவர் தம் சீடர்களுக்கு ஒரு கதையைச் சொன்னார், “கர்த்தருடைய ஜெபம்” என்று நாம் அழைப்பதைப் பயன்படுத்தி எப்படி ஜெபிப்பது என்பதைக் கற்றுக் கொடுத்தார். ஜெபத்தைப் பற்றிய பாடத்தை விளக்குவதற்கு அவர் கதையைப் பயன்படுத்தினார் என்று நாம் ஊகிக்க முடியும். அவர் சொன்னார்: “பின்னும் அவர் அவர்களை நோக்கி: உங்களில் ஒருவன் தனக்குச் சிநேகிதனாயிருக்கிறவனிடத்தில் பாதிராத்திரியிலே போய்: சிநேகிதனே, என் சிநேகிதன் ஒருவன் வழிப்பிரயாணமாய் என்னிடத்தில் வந்திருக்கிறான், அவன்முன் வைக்கிறதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை, நீ மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். வீட்டுக்குள் இருக்கிறவன் பிரதியுத்தரமாக: என்னைத் தொந்தரவு செய்யாதே, கதவு பூட்டியாயிற்று, என் பிள்ளைகள் என்னோடேகூடப் படுத்திருக்கிறார்கள், நான் எழுந்திருந்து, உனக்குத் தரக்கூடாது என்று சொன்னான். பின்பு, தனக்கு அவன் சிநேகிதனாயிருக்கிறதினிமித்தம் எழுந்து அவனுக்குக் கொடாவிட்டாலும், தன்னிடத்தில் அவன் வருந்திக் கேட்கிறதினிமித்தமாவது எழுந்திருந்து, அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (லூக்கா 11: 5-8).

அந்த தேவையிலிருக்கும் மனிதருக்கு “அவரது வெட்கமற்ற விடாமுயற்சி மற்றும் வற்புறுத்தலின் காரணமாக” மட்டுமே ரொட்டி கிடைத்தது என்பதைக் கவனியுங்கள். நாம் நமது நண்பர்களுடன் மட்டுமே “வெட்கமின்றி இருப்போம்” – ஏனென்றால் நட்பு நம்மை தைரியமாக்குகிறது. மேலும் நாம் கடவுளுடனான நட்பில் எவ்வளவு அதிகமாக வளர்ந்து முன்னேறுகிறோமோ அவ்வளவு தைரியமாகவும், நம்பிக்கையுடனும் இருக்க முடியும்.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: உங்கள் நெருங்கிய நண்பர்களுக்காக நீங்கள் நேரம் ஒதுக்கும் அதே ஆர்வத்துடனும், நெருக்கத்துடனும் ஜெபிக்க மறக்காதீர்கள்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon