“இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.” – 1 கொரி 10:12
நம்மைப் பற்றி அதிகம் சிந்திப்பதாலும், நம்மை அதிகமாக நம்புவதாலும் தான் நாம் பாவத்தின் தூண்டுதலுக்குள்ளாக இழுக்கப்படுகிறோம். இது சத்துருவால் ஊக்குவிக்கப்படும் மனப்பான்மை. இதனால் நாம் பெருமிதம் கொள்கிறோம், நாம் நன்றாகத்தான் இருக்கிறோம் என்று நினைக்கிறோம். ஆனால் சாத்தான் நம்மைத் சோதிக்கிறான். நாம் பாவத்தில் விழுகிறோம்.
இந்த அடுத்த கூற்று உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கக்கூடும்: ஒரு நல்ல வகையான சோதனையும் இருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். நாம் தீமை செய்ய வேண்டுமென சாத்தான் நம்மைத் தூண்டுகிறான். ஆனால் நன்மை செய்ய வேண்டுமென கடவுள் நம்மைத் தூண்டுகிறார். ஒவ்வொரு முறையும் சத்துரு உங்கள் முன் ஒரு மோசமான தெரிந்து கொள்ளுதலை வைக்கும் போது, கடவுள் எப்போதும் ஒரு நல்லதொன்றை ஆயத்தமாக வைத்திருக்கிறார்.
பாவத்திற்கான சோதனையானது, உங்களை மேற்கொண்டு விடும் என்பது போல் தோன்றும் போது, சத்துருவை விட மிகவும் வல்லமை பொருந்திய பரிசுத்த ஆவியானவர் நல்ல விதத்தில் உங்களை மேற்கொள்ள விரும்புகிறாரென்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் அவரை அனுமதித்தால், பெரிய காரியங்களைச் செய்ய அவர் உங்களை ஊக்குவிக்க விரும்புகிறார்.
தேவன் நம் வாழ்க்கையை காப்பாற்ற முயற்சிக்கிறார். அவர் நம்மை பலப்படுத்த விரும்புகிறார், அதனால் என்ன நடந்தாலும், நாம் அவருடைய மறைவின் கீழ் பாதுகாக்கப்படுவோம். நன்மை செய்ய கடவுள் உங்களைத் தூண்டும்போது, நீங்கள் செய்யக்கூடிய மிகச் சிறந்த விஷயம், கீழ்ப்படியுங்கள்.
ஜெபம்
பரிசுத்த ஆவியானவரே, உம்முடைய நல்ல “சோதனைகளுக்கு” நான் செவிகொடுக்க விரும்புகிறேன். சத்துரு நான் தடுமாறும் படி செய்யும் போது, நான் பின்பற்றத்தக்க உம்முடைய வழியையும், சித்தத்தையும் எனக்கு காட்டுவீராக.