நன்றியறிதலைப் பயிற்சி செய்

“கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்.” – சங்கீ 34:1

நம்முடைய அனேக ஆசீர்வாதங்களுக்காக நன்றியறிதலுடன் இருக்க வேண்டுமென்று நாம் அறிந்திருக்கிறோம். தேவன் நாம் நன்றியுடனிருக்க வேண்டுமென்று தமது வார்த்தையிலே சொல்கிறார். நம்முடைய அனுபவத்திலிருந்து நாம் தேவனை துதிக்க தொடங்கும் போது நம் பாரங்களும் பிரச்சினைகளும் நம் தோளினின்று நீங்குவதை அறிந்து கொள்ளலாம்.

தாவீது 34:1,19 ல் “கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும். நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அனேகமாயிருக்கும்; கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்” என்று சொல்கிறார்.

நன்றியறிதலின் வல்லமை அவ்வளவாக இருக்கிறது. அது நம்மை விடுவிக்கிறதோடில்லாமல், நம் வாழ்விலே நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆசீர்வாதங்களுக்காக தேவனுக்கு நன்றி செலுத்தும் போது நாம் இன்னும் அதிக நன்றியோடிருக்கத்தக்கதாக இன்னும் அனேக ஆசீர்வாதங்களை காணத் தொடங்குவோம்.

நன்றியோடிருப்பதை பயிற்சி செய்ய நேரம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று உங்களை உற்சாகப்படுத்துகிறேன். நாம் நன்றியுடனிருக்க அனேக காரியங்களிருக்கிறது. நாம் அதில் ஒவ்வொரு நாளும் கவனம் செலுத்த வேண்டும். சங்கீதக்காரனின் அறிவுரையை நினைவில் கொள்ளுங்கள். நன்றியுள்ளவர்களாயிருந்து அவரிடம் அதை தெரியப்படுத்துங்கள். நேசத்தோடும் அவரை துதியுங்கள் (சங்கீ 100:4).

ஜெபம்

அன்பான தேவனே, நன்றியறிதலின் வல்லமையானது உண்மையிலேயே நம்ப முடியாததாக இருக்கிறது, அனுதினமும் என்னை ஆசீர்வதித்து என் வாழ்விலே கிரியை செய்கிறதற்காக உமக்கு நன்றி. உம்மாலன்றி என்னில் எதுவும் இல்லை என்று அறிந்திருக்கிறேன். எனவே எனக்கு நீர் செய்திருக்கும் நண்மைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon