
இந்தத் தேகத்தில் குடியிருக்கையில் கர்த்தரிடத்தில் குடியிராதவர்களாயிருக்கிறோமென்று அறிந்தும், எப்பொழுதும் தைரியமாயிருக்கிறோம். (2 கொரிந்தியர் 5:7)
நாம் எதைப் பார்க்கிறோம், உணர்கிறோம் என்பதை விட விசுவாசத்தால் வாழ வேண்டும் என்று வேதம் நமக்குக் கற்பிக்கிறது; இருப்பினும், சில சமயங்களில் கடவுள் நம்மிடம் பேசுவதற்கு நம் சூழ்நிலைகளைப் பயன்படுத்துகிறார். உதாரணமாக, தேவன் எங்களிடம் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் கொடுப்பதைப் பற்றி பேசுவதை, டேவும் நானும் உணர ஆரம்பித்தபோது, எங்கள் இருவருக்கும் நிச்சயமாக ஒரு நிகழ்ச்சியை எப்படி தயாரிப்பது என்று தெரியாது. பணம் இல்லாமல் அதை ஒளிபரப்ப முடியாது. சொந்தமாகப் போதுமான பணத்தைப் கொடுக்க எங்களுக்கு வழி இல்லை. எனவே கடவுள் அதை வழங்க வேண்டியிருந்தது. நாங்கள் எங்கள் நண்பர்கள் மற்றும் கூட்டாளர்களுக்கு கடிதம் எழுதி, நிதி பெறவில்லை என்றால், நாங்கள் வேறு ஒரு படி எடுத்திருக்க முடியாது. தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் செய்வதைக் குறித்து எவ்வளவு நம்பிக்கை இருந்தாலும், எங்களிடம் பணம் இருக்க வேண்டும். கடவுள் எங்கள் இருதயத்தில் பேசியதாக நாங்கள் நம்பினோம். ஆனால் சூழ்நிலையின் மூலமும் அவர் பேச வேண்டும். நம்பிக்கை, முட்டாள்தனம் மற்றும் தற்பெருமை ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும். தொலைகாட்சியில் செல்வதற்காக நாங்கள் கடனில் மூழ்குவது முட்டாள்தனமாக இருந்திருக்கும்.
ஒரு பெண் பிரார்த்தனை செய்து, குடும்பச் செலவுகளுக்கு உதவ வேலைக்குச் செல்ல வேண்டும் என்று நினைக்கிறாள் என்று வைத்துக்கொள்வோம். அவள் ஒரு வேலையைப் பெற முடிவு செய்கிறாள். ஆனால் அவளுக்கு இரண்டு சிறிய குழந்தைகள் உள்ளனர். நம்பகமான குழந்தை பராமரிப்பாளரை அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், அவளால் வேலைக்குச் செல்ல முடியாது. அவள் முன்னேறுவதற்கு, கடவுள் கவனித்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை அது. குழந்தை பராமரிப்பாளரை கடவுள் வழங்கவில்லை என்றால், அவள் வேலைக்குச் செல்வது பற்றிய அவளுடைய எண்ணங்களை கேள்விக்குள்ளாக்க வேண்டியிருக்கும். வாழ்க்கையில் இந்த நேரத்தில் குடும்பத்துடன் வீட்டில் இருப்பது, வேலை செய்வதை விட சிறந்தது என்று கடவுள் அவளுக்குக் காட்டுகிறார்.
நாம் விசுவாசத்தில் நடக்கிறோம், ஆனால் சூழ்நிலைகளை எப்போது முற்றிலும் புறக்கணிக்க வேண்டும், எப்போது சூழ்நிலைகளுக்கு கவனம் செலுத்த வேண்டும் என்பதை அறிய ஞானத்தை தரும்படி கடவுளிடம் கேட்க வேண்டும். ஏனென்றால் அவர் நம்மிடம் பேசவும், நம்மை வழிநடத்தவும் அவற்றை பயன்படுத்துகிறார்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: விசுவாசத்தினால் வாழுங்கள், ஆனால் முட்டாள்தனமாக இருக்காதீர்கள்.