“நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்.” – நீதி 13:12
நான் நம்பிக்கையை “நல்ல காரியங்களின் மகிழ்ச்சியான எதிர்பார்ப்பு” என்று வரையறுக்கிறேன். நம் வாழ்வில் தேவனுடைய நன்மையை எதிர்பார்க்கும்போது, அது அதிக மகிழ்ச்சிக்கான கதவைத் திறக்கிறது. ஆகவே, உங்களுக்கு ஏதாவது நண்மை நடக்க வேண்டுமென்று மிகவும் அதிகமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா?
நாம் வாழும் வரை, நீங்களும் நானும் எப்போதும் எங்கேயாவது சென்று கொண்டுதானிருப்போம். கடவுள் நம்மை இலக்கைக் கொண்டிருக்கும் தரிசனம் உள்ளவர்களாக படைத்தார். ஒரு தரிசனம் இல்லாமல், நாம் சலிப்பாகவும், நம்பிக்கையற்றவர்களாகவும் மாறி விடுகிறோம். நம்பிக்கை இழக்கும் போது இருதயம் இளைப்படைந்து விடும் என்று நீதிமொழிகள் 13:12 சொல்கிறது. ஆனால் நம் விருப்பம் நிறைவேறும் போது, அது ஜீவ விருட்சம் போல் இருக்கும்.
நாம் அவர் மேல் நம்பிக்கை கொண்டவர்களாக வாழ வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். அதனால் நாம் வாழ்க்கையை அனுபவிக்க முடியும். உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கப் போவதில்லை. தேவன் மேல் உங்களுக்கு எவ்வளவு அதிகமாக நம்பிக்கை இருக்கிறதோ, அவ்வளவாய் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புங்கள் – நம்பிக்கை நேர்மறையானது! வாழ்க்கையை அனுபவிக்க நீங்கள் ஒரு நல்ல மனப்பான்மையை கொண்டிருக்க வேண்டும். தேவன் நேர்மறையானவர், நம் ஒவ்வொருவருக்கும் நேர்மறையான காரியங்கள் நடக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார், எனவே அவர் மேல் உள்ள நம்பிக்கையால் இன்று உங்களை நிரப்புங்கள். நற்காரியங்களின் மகிழ்ச்சியான எதிர்பார்ப்புடன் வாழுங்கள்.
ஜெபம்
தேவனே, என் வாழ்க்கையில் உம்முடைய நன்மையை, மகிழ்ச்சியுடன் எதிர்பார்க்க நான் இன்று தேர்வு செய்கிறேன். என் நம்பிக்கை அதிகரிக்கும் போது மகிழ்ச்சியும் அதிகரிக்கும் என்று எனக்குத் தெரியும். ஆண்டவரே, நான் உம் மீது என் நம்பிக்கையை வைக்கிறேன்!