நம் ஆவிக்குறிய பாரம்பரியம்

“தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;” – ரோமர் 8:29

இயேசு இவ்வுலகத்திற்கு ஒரு பரிபூரணமான, பாவமற்ற பலியாக இருக்கும் படி வந்தார். ஏனென்றால் நாம் இயற்கையிலேயே பரிபூரணமாக இருக்கும் திறனை கொண்டிருக்கிறதில்லை. அவருடைய பலியினாலே நாம் ஒவ்வொரு நாளும் இயேசுவைப் போல இன்னும் அதிகமாக மாறலாம். இயேசு வாழ்ந்தது போல நாமும் வாழும் போது  நாம் நம் ஆவிக்குறிய பாரம்பரியத்தைப் பெற்றுக் கொள்கிறோம்.

இயேசுவைப் போல நீதியாக வாழ்வதென்பது ஒரே இரவிலே நடைபெறாது. நாம் அனைவரும் தடுமாறுவோம். நாம் பரிபூரணமாக இருப்போமேயென்றால் நமக்கு ஒரு இரட்சகர் தேவைப்பட மாட்டார்! ஆனாலும் நாம் நம் இருதயங்களிலே நம் ஆவிக்குறிய பாரம்பரியத்தை நிறைவேற்றவும், அனுபவிக்கவும் வாஞ்சிக்க வேண்டும். நம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் சாயலுக்கொப்பாக தேவன் நம்மை மாற்றுவார் என்று அறிந்தவர்களாக அவரை நம்ப நாம் கற்றுக் கொள்ளலாம்.

எபே 1:11-12 சொல்கிறதாவது, அவருக்குள் நாம் ஒரு சுதந்திரத்தைப் பெற்றிருக்கிறோம் ….இதனால் கிறிஸ்துவின் பேரிலே முன்குறிக்கப்பட்ட நாம் அவருடைய மகிமைக்காக வாழ வேண்டும்.

உங்களுக்கு ஒரு சுதந்திரம் உண்டு, நீங்கள் யாரென்றும், நீங்கள் யாருடையவர்களென்றும் அறிந்திருப்பதால் ஏற்படும் சமாதானம், பாதுகாப்புணர்வினால் வாழ வேண்டுமென்று தேவன் விரும்புகிறார்.

தேவனை நம்பி, அவர் உங்களை அனுதினமும் அவருடைய குமாரனைப் போன்று மாற்ற அனுமதிப்பீர்களா?

ஜெபம்

தேவனே, இயேசுவுக்குள்ளாக இருக்கும் என்னுடைய ஆவிக்குறிய பாரம்பரியத்திற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். ஒரு நாளில் ஒன்றாக என்னை உம்முடைய குமாரனுடைய சாயலுக்கொப்பாக மாற்ற உம்மால் இயலும் என்று அறிந்ததால், உம்மை நம்புகிறேன்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon