
ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார். (எபேசியர் 2:10)
பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் முதன்முதலில் கடவுளுடன் நெருக்கமாக நடக்கத் தொடங்கிய போது, நான் செய்ய விரும்பிய எல்லாவற்றுக்கும் அவரிடமிருந்து சில விசேஷ உறுதிப்படுத்தலுக்காக நான் காத்திருப்பேன்—நல்ல செயல்களைச் செய்ய அவருடைய ஆவி என்னில் தங்கியிருக்கிறது என்பதை நான் அறியும் வரை. கடவுளுடன் நடந்த ஆரம்ப ஆண்டுகளில் இது நடந்த்து. தேவைப்படும் ஒரு பெண்ணுக்கு பத்து டாலர்கள் கொடுப்பது என் இருதயத்தில் இருந்தது. மூன்று வாரங்கள் அந்த ஆசையை என் இருதயத்தில் சுமந்து கொண்டிருந்தேன். நான் இறுதியாக ஜெபித்தேன், “ஆண்டவரே, உண்மையில், இந்த நபருக்கு பணத்தைக் கொடுக்க நீர் சொல்கிறீரா? அது உண்மையிலேயே நீராக இருந்தால் நான் அதை செய்வேன்!” பத்து டாலர்கள் அப்போது நிறைய பணமாக இருந்தது, கடவுளிடமிருந்து எனக்கு தெளிவான வழிகாட்டுதல் இருந்தாலொழிய நான் அதைப் செய்ய விரும்பவில்லை.
அவர் என்னிடம் மிகவும் தெளிவாகப் பேசினார், “ஜாய்ஸ், அது உண்மையில் நான் இல்லாவிட்டாலும், நீ யாரையாவது ஆசீர்வதித்தால் நான் உன் மீது கோபப்பட மாட்டேன்!”
தேவனுடைய ஆவி நமக்குள் வாழ்கிறது என்பதன் பலன்களில் ஒன்று நல்ல பண்பு (காண்க கலாத்தியர் 5:22-23). எனவே, மக்களுக்கு நல்லவராக இருக்க வேண்டும் என்ற ஆசை நமக்கு உள்ளது. கடவுள் ஆபிரகாமை ஆசீர்வதிக்கப் போவதாகக் கூறினார், அதனால் அவர் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க முடியும் (ஆதியாகமம் 12:2 ஐப் பார்க்கவும்). கடவுளுக்குச் செய்யும் சேவையாக மற்றவர்களை மகிழ்விக்க, நாம் எளிமையாக வாழும் நிலையை அடைவது எவ்வளவு அருமையாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.
தேவைகள் உள்ளவர்களால் உலகம் நிறைந்துள்ளது. எப்பொழுதும் யாரோ ஒருவருக்கு, எங்காவது, ஊக்கமளிக்கும் வார்த்தை தேவைப்படும். ஒருவருக்கு குழந்தை பராமரிப்பாளர், போக்குவரத்து உதவி அல்லது நிதி உதவி தேவை. நான் கடவுளுடன் நேரத்தை செலவிடும்போது யாராவது ஒருவருக்கு உதவ வேண்டும் என்ற வலுவான ஆசையை உணர்கிறேன், மேலும் அந்த ஆசை என்பது கடவுள் என்னிடம் பேசுவது, என்பதை நான் கற்றுக்கொண்டேன். கடவுள் நல்லவர், நாம் அவருடன் நேரத்தை செலவிடும் போது மற்றவர்களுக்கு நல்ல காரியங்களைச் செய்ய விரும்புகிறோம்.
நீங்கள் யாரை ஆசீர்வதிக்க முடியும் என்பதைக் காட்ட ஒவ்வொரு நாளும் கடவுளிடம் கேளுங்கள். அன்பு இருக்கும் இடத்தில் கடவுள் இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள் (பார்க்க 1 யோவான் 4:12).
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: நல்லதைச் செய்ய உங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.