நல்ல போராட்டத்தை எப்படி போராடுவது

நல்ல போராட்டத்தை எப்படி போராடுவது

“விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாயிருக்கிறாய்.” – 1 தீமோ 6:12
நல்ல போராட்டத்தை நாம் போராட வேண்டியிருக்கிறது. ஆனால் நடைமுறையில் அது எப்படி காணப்படுகிறது? ஆறு முக்கிய காரியங்கள் இதோ:

  1. வலுவாக யோசியுங்கள். எதிரியைத் தாக்கி தோற்கடிப்பதற்கு, ஒரு போர் தளபதி போருக்காக திட்டமிடுவதைப் போன்று திட்டமிடுங்கள்.
  2. ஊக்கமாக ஜெபியுங்கள். எபி 4:16. நாம் தேவனுடைய சிம்மாசனத்தை தைரியத்தோடு அணுக வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. அவரிடம் தைரியமாக சென்று உங்கள் தேவைகளை சொல்லுங்கள்.
  3. பயமின்றி பேசுங்கள். 1 பேதுரு 4:11 சொல்கிறதாவது. ‘பேசுகிற எவனும் தேவனுடைய தீர்க்க உரையை பேசுவதைப் போன்று பேசக்கடவன்… தீய சக்திக்கு எதிராக நீங்களும் நானும் ஒரு ஆவிக்குறிய அதிகாரத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
  4. தாராளமாக கொடுங்கள். நாம் கொடுப்பதைப் போன்று தான் பெற்றுக் கொள்வோம். (லூக்கா 6:38) தாராளமான வாழ்க்கையை வாழுங்கள்.
  5. ஊக்கமாக வேலை செய்யுங்கள். நீங்கள் என்ன செய்கின்றீர்களோ அதை உங்கள் முழு பெலத்துடனும் செய்யுங்கள். (பிர 9:10). பரிசுத்த ஆவியிலே உங்களை உற்சாகப்படுத்திக் கொண்டு காரியத்தை செய்து முடியுங்கள்
  6. நிபந்தனையின்றி நேசியுங்கள். தேவனுடைய பிள்ளகளாக, தேவன் நம்மை நிபந்தனையின்றும், தியாகத்துடனும் நேசிப்பதைப் போன்று நாமும் பிறரை நேசிக்க வேண்டும்.

இவைகளை முயன்று செய்யுங்கள். எதிரி வரும் போது தேவனுடைய வல்லமையால் நீங்கள் நிரப்பப்பட்டு தோற்கடிக்கப்படாமல் இருப்பீர்கள்.


ஜெபம்

தேவனே, நான் எதுவும் செய்யாமல் அமர்ந்து கொண்டு, நான் போராடும் படி என்னை அழைத்திருக்கும் விசுவாச போராட்டத்தை இழந்து விட விரும்பவில்லை. எதிரிக்கு எதிரான போரிலே இந்த ஆறு காரியங்களையும் எப்படி பயன்படுத்துவது என்பதை காண்பித்தருளும்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon