நல்ல வேர்கள் = நல்ல கனி!

“ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர் கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு, நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக.” – கொலோ 2:6-7

நம்முடைய நடத்தை குறிப்பிட்ட இடத்திலிருந்து வருகிறது என்பதை உணர்ந்து கொள்வது முக்கியமானதாகும். கெட்ட நடத்தை என்பது ஒரு கெட்ட வேரைக்கொண்ட கெட்ட மரத்திலிருந்து கிடைக்கும் கெட்ட கனியை போன்றது.

வெளிப்படையான அறிகுறிகளோடே உங்கள் வாழ்க்கை முழுவதும் போராடிக்கொண்டு, சமாளித்துக் கொண்டோ இருக்கலாம். ஆனால் வேரானது வெட்டி எறியப்படாவிட்டால் கெட்ட கனியானது எங்கோ ஓர் இடத்தில் கண்டிப்பாக வெளிப்படும்.  இந்த அடிப்படை சூத்திரமானது ஒருபோதும் ஒழிந்து போவதில்லை; கெட்ட அழுகிய கனியானது கெட்ட அழுகிய வேரிலிருந்து வெளிப்படுகிறது.

கெட்ட கனியை பெறாமல் இருக்க,  தேவனிலே ஆழமாக வேரூன்றி இருக்க வேண்டுமென்று பரிசுத்த பவுல் கொலோசெயருக்கு அறிவுறுத்தியதை பின்பற்ற வேண்டும்.

நீங்கள் உங்களுடைய சொந்த வேரை ஜாக்கிரதையாக ஆராயவேண்டும்.  அவைகள் கெட்டதாக, ஊறு விளைவிக்கக் கூடியதாக,  துஷ்பிரயோகப் படுகிறதாக இருக்குமென்றால் சோர்வடைந்து போகாதீர். நீங்கள் அந்த மோசமான நிலத்தினின்று வேரோடு பிடுங்கப்பட்டு, இயேசு கிறிஸ்துவுக்குள்ளாகவும், அவரது அன்பிலும் வேரூன்றப் பட்டிருக்கத்தக்கதாக ஏற்றப்பட தக்கதாக நல்ல நிலமாகிய இயேசு கிறிஸ்துவுக்குள்ளாக நடத்தப்படலாம்.

வேரோடே பிடுங்குவது என்பது வேதனை அளிக்கக் கூடும்.  மீண்டுமாக நடப்பட்டு வேர் கொள்வதென்பது அதிக நேரம் மற்றும் முயற்சி தேவைப்படும் ஒரு செயலாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால் விசுவாசத்தாலும், பொறுமையாலும் தான் நாம் தேவனுடைய வாக்குத்தத்தங்களை சுதந்தரித்துக் கொள்கிறோம். நீங்கள் எங்கே சென்றாலும் நற்கனிகளைக் கொடுக்க கிறிஸ்துவில் ஆழமாக ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்பதே என்னுடைய ஜெபமாக இருக்கிறது.

ஜெபம்

 நான் நற்கனிகளை கொடுக்கத்தக்க நல்ல வேர் கொண்ட நல்ல மரமாக இருக்க, கெட்ட நிலத்திலுள்ள என்னுடைய வேரைப் பிடுங்கி நல்ல நிலமாகிய கிறிஸ்துவுக்குள் நட எனக்கு உதவுவீராக. அது வேதனையானது என்பதை அறிந்திருக்கிறேன். ஆனால் என் வாழ்விலே விசுவாசத்திலும், பொறுமையிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த எனக்கு உதவுவீர் என்பதை அறிந்திருக்கிறேன்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon