
நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள். (சங்கீதம் 95:6)
தேவன் நம்மிடம் பேசக்கூடிய சூழ்நிலையை ஆராதனை உருவாக்குகிறது என்று நான் நம்புகிறேன். ஆராதனையை வரையறுப்பது கடினம். அது தேவன் நமக்கு என்ன செய்கிறார் என்பதை விட, அவர் யார் என்பதைப் பற்றியது. உண்மையான ஆராதனை நமக்குளிருந்து வருகிறது; இது விலைமதிப்பற்றது மற்றும் அற்புதமானது, மேலும் கடவுளைப் பற்றி நாம் எப்படி உணர்கிறோம் என்பதை வாய்மொழியாகப் பேசுவதற்கான முயற்சியாகும். இது ஆண்டவரிடம் நம் இருதயங்களை ஊற்றுவதாகும், மேலும் இது வார்த்தைகளில் சொல்ல கடினமாக இருக்கும் அன்பு, நன்றியுணர்வு மற்றும் பக்தி ஆகியவற்றின் ஆழத்தை பிரதிபலிக்கிறது. உண்மையான ஆராதனையை விவரிக்கும் அளவுக்கு வார்த்தைகள் இல்லை. உண்மையில், ஆராதனை என்பது மிகவும் தனிப்பட்ட மற்றும் நெருக்கமான காரியமாகும். நாம் அதை நம் வார்த்தைகளால் வரையறுக்க முயற்சிக்கக்கூடாது.
ஆராதனை என்பது வெறும் பாடல்களைப் பாடுவதை விட மேலானது. சொல்லப்போனால், உண்மையான ஆராதனை என்பது இருதயத்தின் நிலை மற்றும் மனநிலை. ஒரு ஸ்வரம் கூட பாடாமல் நாம் அவரை உண்மையாக ஆர்வத்தோடு வழிபடலாம். ஆராதனை என்பது நம் இருதயத்தில் பிறக்கிறது; அது நம் எண்ணங்களை நிரப்புகிறது, பின்னர் அது நம் வாய் வழியாகவும், உடம்பின் மூலமும் வெளிப்படுத்தப்படுகிறது. நம் இருதயம் கடவுளுடைய பிரமிப்பினால் நிரம்பியிருந்தால், நாம் பாடவோ, ஆடவோ, கைதட்டவோ அல்லது கைகளை உயர்த்தவோ விரும்பலாம். நாம் பயபக்தியுடன் கடவுளுக்கு முன்பாக அமைதியாக இருக்கலாம். நாம் காணிக்கைகளை கொடுக்கலாம் அல்லது கடவுளுக்கான நம்முடைய அன்பின் வெளிப்பாடாக பிற வடிவங்களை கொடுக்க விரும்பலாம். ஆனால் சரியான இருதயம் இல்லாமல் செய்யப்படும் செயல்கள் அனைத்தும் வெறுமனே சம்பிரதாயமானது மற்றும் கடவுளுக்கு அர்த்தமற்றது.
இன்று கடவுளை மனதார வணங்கும்படி நான் உங்களை ஊக்குவிக்கிறேன். நீங்கள் அவரை நேசிப்பதால் அதைச் செய்யுங்கள், நீங்கள் அவரை வணங்கும்போது அவர் உங்களிடம் பேசினால் ஆச்சரியப்பட வேண்டாம்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: கடவுளை, அவர் யார் என்பதற்காக நன்றியுள்ள இருதயத்தோடு அவருக்கு ஆராதனை செய்யுங்கள்.