
“உடனே பிள்ளையின் தகப்பன் விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான்,” – மாற்கு 9:24
நீங்கள் எப்போதாவது ஒரு பயங்கர சூழ்னிலையிலே மாட்டிக் கொண்டு தேவனிடம் ‘ஏன்’ இது எனக்கு நடைபெறுகிறது என்று கேட்டதுண்டா?
தேவன் அந்த கேள்விக்கு விடையளிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரது விளக்கம் எதையாவது மாற்றுமா?. அந்த பயங்கரமான காரியத்தின் விளைவு இன்னும் இருக்கத்தான் செய்யும். அந்த வேதனையானது முன்பு எப்படி இருந்ததோ அப்படியே தான் இருக்கும். நீங்கள் என்ன கற்றுக் கொண்டிருந்திருப்பீர்கள்?
நாம் தேவனிடம் அந்த கேள்வியைக் கேட்கும் போது, நாம் உண்மையிலேயே என்ன கேட்கிறோமென்றால் “தேவனே, என்னை நீர் உண்மையிலேயே நேசிக்கின்றீரா? என்னுடைய துக்கத்திலும், வேதனையிலும் என்னை பார்த்துக் கொள்வீரா? என்னை நீர் கைவிட்டு விட மாட்டீர் தானே? நாம் பயப்படுவதால் தேவன் நம்மை கவனிப்பதில்லை என்று அர்த்தம் ஆகுமா? நாம் விளக்கங்களை கேட்கிறோம்.
மாறாக, நாம் “தேவனே, எனக்குப் புரியவில்லை, ஏன் தீமையான காரியங்கள் நடைபெறுகிறது என்பதற்கான காரணங்களை என்னால் கிரகித்துக் கொள்ள இயலாது என்று நம்புகிறேன். ஆனால் நீர் என்னை நேசிக்கிறீர் என்றும், எப்போதுமே என்னோடு இருக்கிறீர் என்றும் நிச்சயம் நம்புகிறேன்” என்று சொல்லக் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஒரு காரியத்தினின்று விடுவிக்கப்படுவதை விட, அதனூடாக கடந்து செல்ல அதிக விசுவாசம் தேவைப்படுகிறது என்று நம்புகிறேன். தேவன் மேல் உங்கள் விசுவாசத்தை வையுங்கள். பெலனடைந்தவர்களாக வெளியே வருவீர்கள்.
ஜெபம்
தேவனே, சூழ்னிலைகள் என் மனதை சந்தேகத்தால் நிரப்ப முயலும் போதும், நான் உம்மை நம்புகிறேன். என் மேல் நீர் கொண்டிருக்கும் அன்பை நினைவில் கொண்டு என்ன நடந்தாலும் உம்மீது விசுவாசத்தை வைக்க எனக்கு உதவுவீராக.