நாம் காத்திருக்கிறோம்; கடவுள் பேசுகிறார்

நாம் காத்திருக்கிறோம்; கடவுள் பேசுகிறார்

தேவனே, உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நீர் செய்பவைகளை, நீரேயல்லாமல் உலகத்தோற்றம்முதற்கொண்டு ஒருவரும் கேட்டதுமில்லை, செவியால் உணர்ந்ததுமில்லை, அவைகளைக் கண்டதுமில்லை. (ஏசாயா 64:4)

நாம் அவரிடம் எதற்காய் ஜெபிக்க வேண்டும் என்று வெறுமனே கேட்டு, அவர் பதிலளிக்கும் வரை காத்திருந்து, அதற்குக் கீழ்ப்படிந்தால், பரிசுத்த ஆவியானவர் ஜெபத்தில் நம்மை ஆச்சரியமான செயல்களுக்குள் வழிநடத்துவார்.

தேவனுக்காகக் காத்திருக்கவும், அவர் நம்மிடம் பேசவும், நாம் ஜெபிக்கும்போது நம்மை வழிநடத்தவும் அனுமதிக்க நமக்கு நேரமில்லை என்று சொன்னால் நாம் ஞானமற்றவர்கள். உணவகத்தில் மேசைக்காக நாற்பத்தைந்து நிமிடங்கள் காத்திருப்போம், ஆனால் கடவுளுக்காகக் காத்திருக்க நமக்கு நேரமில்லை என்று கூறுகிறோம். நாம் கடவுளுக்காகக் காத்திருக்கும்போது, அவருடைய வழிநடத்துதலுக்காக நம் இருதயங்களை அவர் பக்கம் திருப்பும் போது, நாம் அவரை மதிக்கிறோம். காத்திருப்பதற்கான நமது விருப்பத்தின் மூலம், அவருடைய சித்தத்தை நாம் விரும்புகிறோம் என்பதையும், வழிகாட்டுதலுக்காக நாம் அவரைச் சார்ந்திருக்கிறோம் என்பதையும் அவர் அறிவார்.

நம் இருதயங்களை கடவுளிடம் திருப்புவதன் மூலமும், அவருக்காக காத்திருப்பதன் மூலமும் நிறைய நேரத்தை மிச்சப்படுத்துகிறோம். இன்றைய வசனம் கூறுவது போல், கடவுள் தம்மை எதிர்பார்த்து காத்திருப்பவர்களின் சார்பாக தம்மை கிரியையில் காட்டுகிறார். “ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன், இன்று என் ஜெபத்தில், நீர் காட்டும் திசைக்காக உமக்காக காத்திருக்கிறேன்” என்று கூறி உங்கள் பிரார்த்தனைகளைத் தொடங்குங்கள். பின்னர் உங்கள் சொந்த மனதில் அல்லது விருப்பத்தில் இருப்பதை விட, உங்கள் இருதயத்தில் உள்ளதை வைத்து ஜெபிக்கத் தொடங்குங்கள்.

நான் சமீபத்தில், எனக்குத் தெரிந்த ஒருவர் செய்ய வேண்டிய ஒரு குறிப்பிட்ட காரியத்தை அவர் செய்ய வேண்டும் என்று ஜெபித்துக் கொண்டிருந்தேன், ஆனால் அவர் ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்வதற்காய் நான் ஜெபிக்க வேண்டும் என்று கடவுள் எனக்குக் காட்டினார், ஏனெனில் அதன் பற்றாக்குறை அவருடைய வாழ்க்கையின் பல பகுதிகளை பாதித்திருந்தது. நான் பார்த்த ஒரு பகுதிக்காக மட்டுமே நான் ஜெபித்திருப்பேன், ஆனால் கடவுள் என்னை விட ஆழமாக பார்த்தார்.
மற்றொரு சமயம் நான் ஒருவரிடம் பார்த்த சில பிரச்சனையான நடத்தையைப் பற்றி ஜெபித்தேன், ஆனால் அவர்களின் பிரச்சனையின் மூல காரணம், சுய நிராகரிப்பு என்றும், கடவுள் அவர்களை எவ்வளவு நேசித்தார் என்பதை அறிய நான் அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்றும் அவர் எனக்குக் காட்டினார். நாம் பார்க்கும் காரியங்களைக் குறித்து நாம் அடிக்கடி ஜெபிக்கிறோம், ஆனால் நாம் அவருக்காக காத்திருந்தால் கடவுள் நம்மை ஆழமாக வழிநடத்துவார்.


இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: கடவுளுக்காகக் காத்திருக்கும் நேரம் வீணாகாது.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon