“பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.” – 1 கொரி 8:6
நாம் தேவனோடு சவுகரியமாக இருக்க வேண்டும். நாம் அவரை அவமதிக்கக்கூடாது. ஆனால் அவரைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு விசுவாசியின் உன்னதமான அழைப்பு தேவனை அனுபவிப்பதே என்று நான் நம்புகிறேன். நாம் பிதாவை அனுபவிக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். ஏனென்றால் அவரே ஜீவனானவர். தேவனை நாம் உண்மையாக அனுபவிக்காவிட்டால் வாழ்க்கையை நம்மால் அனுபவிக்க இயலாது.
சில சமயங்களில் நாம் தேவனுடைய பிரசன்னத்தை அனுபவிப்பதில்லை. ஏனென்றால் அவரை சேவிப்பதிலே நாம் மும்முரமாகி விடுகிறோம். நம்மிடம் என்ன வரம் இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதிலும், நம்முடைய ஊழியத்தில் எந்நேரமும் உழைத்துக் கொண்டிருப்பதாலும் அவரை அனுபவிப்பதில்லை. இவ்வாறு எனக்கும் ஏற்பட்டது. என் ஊழியம் தொடங்கப்பட்டு சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு தேவன் என் வேகத்தை குறைக்க வேண்டியிருந்தது. ஏனென்றால் அவருக்காக நான் செய்து கொண்டிருந்த சேவையிலே நான் மிகவும் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தேன். அதனால் அவரை அனுபவிக்காமலிருந்தேன்.
நாம் செய்யும் எல்லாவற்றினாலும் நம்மைப் பற்றியே நாம் பெருமைப்பட்டுக் கொள்ளாமலிருக்க கவனமாக இருக்க வேண்டும். தேவனுக்கு அது தேவையில்லை. நம்முடைய தகப்பனாக நாம் அவரை அறிந்திருந்து அவரை அனுபவிக்க வேண்டுமென்று விரும்புகிறார்.
எனவே, நான் உங்களிடன் கேட்கட்டும். இன்று நீங்கள் செய்வதைப் பற்றி பெருமையோடிருக்கிறீர்களா? அல்லது தேவனை உண்மையாகவே அனுபவிக்கின்றீர்களா?
ஜெபம்
பிதாவாகிய, தேவனே, உம்மை நான் அனுபவிக்க விரும்புகிறேன். உம்முடைய பிரசன்னத்திலே உம்மோடு ஐக்கியப்பட்டிருப்பது மிகவும் அருமையாக இருக்கிறது. என்னுடைய நோக்கத்தையும், சந்தோசத்தையும் உம்மில் மட்டுமே நான் கண்டு கொள்ளத்தக்கதாக என்னுடைய பெருமையை ஒதுக்கி வைத்து விட்டு உமக்கு முன்பு என்னை நான் தாழ்த்துகிறேன்.