அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார். – சங்கீதம் 23:2
ஒரு நிலையான வாழ்க்கை வாழ்கின்றீர்களா? நீங்கள் ஒருவேளை “இனியும் இதை என்னால் செய்ய முடியாது. இதையே எப்போதும் செய்து கொண்டு இருக்க முடியாது” என்று சொல்லிக் கொண்டு இருக்கலாம். இது மாதிரியான கூற்றுகளை நீங்கள் சொல்லும் போது, நீங்கள் உண்மையாகவே சொல்லுகிறது என்னவென்றால், “எனக்கென்று என் எல்லைகள் இருக்கிறது என்பது எனக்கு தெரியும். அதை நான் அடைந்து விட்டேன். ஆனால் இவற்றை நான் கண்டுகொள்ள போவதில்லை. எவ்வளவு நாள் இப்படியே நடக்கிறது என்று பார்க்கலாம் என்கிறீர்கள்.”
நாம் இப்படியாக கண்டுகொள்ளாமல், கவனம் செலுத்தாமல் அதிகமாக நம்மை வருத்திக் கொள்ளும்போது, நம் சரீரத்திலே இங்கே, அங்கே வழி ஏற்படுத்துவதின் மூலம் நம் சரீரம், நமக்கு எச்சரிப்பு கொடுக்கின்றது. ஆனால் நாமோ ‘எல்லாம் சரியாகிவிடும்’ என்று அது தவிர்க்க இயலாமல் ஆகும் வரை அதை கண்டு கொள்ளாமல் புறக்கணித்து விடுகின்றோம்.
இதை நான் பெருமையாக சொல்லவில்லை. என்னுடைய ஊழியத்தின் முதல் 20 ஆண்டுகள் என் சரீரத்திலே நான் மிகவும் அவதிப்பட்டேன். மருத்துவர்களிடம் சென்று எடுக்கக்கூடிய எல்லாவிதமான மாத்திரைகளையும், வைட்டமின் ஊட்டச்சத்துக்களையும் உட்கொண்டேன். மருத்துவர்களோ நான் மிகவும் அதிகமாக என்னை வருத்திக் கொண்டு உழைக்கிறேன் என்று சொன்னார்கள். ஆனால் நானோ அதை கண்டு கொள்ளவில்லை. நான் என்னை வருத்திக் கொண்டு, என்னால் இயன்ற எல்லா பிரயாணங்களையும், பேசும் நிகழ்வுகளையும், கூட்டங்களையும், இவற்றை போன்றவற்றையெல்லாம் ஏற்றுக் கொண்டு என்னை நானே வருத்திக் கொண்டு இருந்தேன்.
இறுதியாக, நீ ஓய்வு எடுக்க நேரம் எடுத்துக்கொள் என்று தேவன் கூறும் போது அதை கண்டுகொள்ளாமல் இருந்தால், அதற்கான கிரயத்தை செலுத்த வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்து கொண்டேன். எனவே சில மாற்றங்களை நான் செய்தேன். இப்போது முன்பிருந்ததைவிட நன்றாக உணர்கிறேன்.
ஒரு நிலையற்ற வாழ்வை நீங்கள் வாழ்ந்துகொண்டு இருப்பீர்கள் என்றால் நீங்கள் செய்யவேண்டிய மாற்றங்களை செய்ய காலம் தாழ்த்தி கொண்டிராதீர்கள். நரம்பு ரீதியாக பிரச்சனையோ, இருதயப் பிரச்சனையோ ஏற்படும்வரை காத்திராதீர். நீங்கள் வாழ வேண்டும் என்று தேவன் விரும்பும் வாழ்க்கையை வாழ இப்போது மாற்றங்களை செய்யுங்கள்.
தேவன் சொல்வதைப் போன்று நீங்கள் வாழ்வீர்கள் என்றால், உங்கள் வாழ்விலே உங்களை மூழ்கடிக்கும் அளவிலான சமாதானம் இருப்பதை கண்டறிவீர்கள் என்பதை உறுதியாக சொல்கிறேன்.
ஜெபம்
தேவனே, என் வாழ்க்கையிலே எந்தெந்த பகுதியில் நிலையற்று இருக்கிறேன் என்பதை எனக்கு காண்பியும். அவற்றை நான் உம்மண்டை சமர்ப்பிக்கின்றேன். நான் என் வாழ்க்கையை அனுபவிக்கவும், இனி வரும் வருடங்களில் எல்லாம் உண்மை சேவிக்கவும் தக்கதாக உம்முடைய இளைப்பாறுதலுக்குள்ளும், சமாதானத்திற்குள்ளும் இன்றே என்னை நடத்துவீராக.