நீங்கள் அவரிடமிருந்து கேட்கிறீர்களா?

நீங்கள் அவரிடமிருந்து கேட்கிறீர்களா?

இந்த மெல்கிசேதேக்கைப்பற்றி நாம் விஸ்தாரமாய்ப் பேசலாம்; நீங்கள் கேள்வியில் மந்தமுள்ளவர்களானபடியால், அதை விளங்கப்பண்ணுகிறது அரிதாயிருக்கும். (எபிரெயர் 5:11)

கேள்விகளை மட்டும் கேட்கும், ஆனால் தன்னுடைய கேள்விக்கான பதிலைக் கூட கேட்க விருப்பமில்லாத ஒருவரை நீங்கள் எப்போதாவது சந்தித்திருக்கிறீர்களா? அப்படி பிறர் சொல்வதை விரும்பாத ஒருவருடன் பேசுவது கடினம். அத்தகைய மனப்பான்மையுடன் உள்ள மக்களிடம் பேசுவதற்கு கடவுள் கவலைப்படமாட்டார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நாம் அவருக்குச் செவிசாய்க்காவிட்டால், அவர் சொல்வதைக் கேட்க ஆர்வமுள்ள ஒருவரைக் கண்டுபிடிப்பார்.

எபிரெயர் 5:11, செவிசாய்க்கும் மனப்பான்மை இல்லாவிட்டால், செழுமையான வாழ்க்கைக் கொள்கைகளைக் கற்கத் தவறிவிடுவோம் என்று எச்சரிக்கிறது. கேட்கும் மனப்பான்மை, நமது செவிப்புலனை மந்தமாகாமல் இருக்க வைக்கும். கேட்கும் மனப்பான்மை கொண்ட ஒருவர், தான் கஷ்டத்தில் இருக்கும் போது அல்லது கடவுளின் உதவி தேவைப்படும்போது மட்டுமே கடவுளிடமிருந்து கேட்க விரும்புவதில்லை, ஆனால் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அவர் சொல்வதைக் கேட்க விரும்புபவார்.

ஒரு மனிதன் ஏதாவது சொல்ல வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கும்போது, அந்த நபரைக் கவனிக்கிறோம்; நமது காதுகள் அவரது குரலைக் கேட்க தயாராக இருக்கும். கடவுளுடனான நமது உறவிலும் இதுவே உண்மை; நாம் ஒவ்வொரு நாளும் முழுமையாக கடவுளிடம் இருந்து கேட்க வேண்டும் மற்றும் அவர் சொல்வதைக் கேட்டு வாழ வேண்டும்.

மக்களுக்கு, கேட்பதற்கு காதுகள் இருந்தும் அவர்கள் கேட்பதில்லை, பார்க்க கண்கள் இருக்கும், ஆனால் அவர்கள் பார்க்க மாட்டார்கள் என்று இயேசு கூறினார் (பார்க்க மத்தேயு 13:9-16). அவர் உடல் செவித்திறன் மற்றும் பார்வை திறன் பற்றி பேசவில்லை, ஆனால் நாம் தேவனுடைய ராஜ்யத்தில் பிறக்கும் போது, நாம் பெறும் ஆவிக்குறிய காதுகள் மற்றும் கண்கள் பற்றி பேசுகிறார். நமது ஆவிக்குறிய காதுகள், கடவுளின் குரலைக் கேட்க நாம் பயன்படுத்தும் காதுகள். நாம் கடவுளிடமிருந்து கேட்க தயாராக இருக்கலாம், ஆனால் அவரிடமிருந்து கேட்க முடியும் என்று நாம் நம்ப வேண்டும். தேவனின் வாக்குறுதிகள் அனைத்தும், நம்பிக்கையின் மூலம் நம் வாழ்வில் நிஜமாகின்றன, எனவே நீங்கள் கடவுளிடமிருந்து கேட்க முடியும் என்று இன்றே நம்பத் தொடங்குங்கள்.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: உங்கள் ஆவிக்குரிய காதுகளைப் பயன்படுத்துங்கள்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon