
ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக. (1 கொரிந்தியர் 15:58)
நாம் உறுதியுடன் இருப்பதே, தேவன் மீதுள்ள நம்முடைய நம்பிக்கையைக் குறிக்கிறது. இதைப் பற்றி சற்று யோசித்துப் பாருங்கள்: “தேவனை நம்புகிறேன்” என்று நான் சொல்லி விட்டு, நான் கவலையுடனும், வருத்தத்துடனும் இருப்பேன் என்றால், நான் உண்மையில் அவரை நம்பவில்லை. “நான் தேவனை நம்புகிறேன்” என்று சொல்லி பின்பு, நான் மனச்சோர்வு மற்றும் விரக்தியில் மூழ்கினால், உண்மையில் தேவனை நான் நம்பவில்லை. நான் தேவனை நம்புகிறேன் என்று சொல்லி விட்டு, கவலை கொண்டு என் மகிழ்ச்சியை இழந்திருந்தால், நான் உண்மையில் அவரை நம்பவில்லை. நாம் தேவனை உண்மையாக நம்பும்போது, அவருடைய இளைப்பாறுதலுக்குள் நுழைய முடியும், மேலும் அவர் மீதான அசைக்க முடியாத நம்பிக்கை, நம் இருதயத்தில் குடியேற அனுமதிக்க முடியும். எதிரி முற்றிலுமாக விலக மாட்டான், ஆனால் அவன், ஒரு பெரிய பிரச்சனையை விட, நமக்கு ஒரு தொல்லையாக மாறுவான்.
நாம் பூமியில் இருக்கும் வரை, தேவனை நேசிப்பதற்கும், சேவை செய்வதற்கும் நம்மால் இயன்றதைச் செய்கிறோம். எதிரி நம்மைச் சுற்றி அலைந்து கொண்டிருப்பான். நமது ஆவிக்குறிய வளர்ச்சிக்கான, கடவுளின் வடிவமைப்பின் ஒரு பகுதியாக, எதிரியை எதிர்க்க கற்றுக் கொள்வதில், ஆவிக்குறிய காரியங்களை வளர்ப்பதும் அடங்கும். அப்போஸ்தலனாகிய பவுல் இதை நன்கு புரிந்துகொண்டார், அதனால் மக்களுக்கு ஒருபோதும் சிரமம் வரக்கூடாது என்று அவர் ஜெபிக்கவில்லை; அவர்கள் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும் என்றும், அவர்கள் உறுதியானவர்களாகவும், அசையாதவர்களாகவும், தேவனை உண்மையில் நம்புபவர்களாகவும் இருக்க வேண்டும் என்று அவர் பிரார்த்தனை செய்தார். நீங்கள் அவருடைய இளைப்பாறுதலில் நுழைய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார், அவர் உங்கள் சார்பாக கிரியை செய்வார்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: உண்மையில் கர்த்தரை நம்புங்கள்.