“கர்த்தர் தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான்.” – உபா 31:8
துக்கமும், தனிமையும் மக்கள் சந்திக்கும் பெரிய பிரச்சினையாகும். இந்த இரண்டும் இணைந்ததாகவே இருக்கின்றது. ஏனென்றால் தணிமையாக இருப்பதைப் பற்றி மக்கள் துக்கமடைகின்றனர். எங்கள் ஊழியங்களிலே தணிமையோடு போராடிக் கொண்டிருப்பவர்களிடமிருந்து அடிக்கடி ஜெப வேண்டுதல்கள் பெறப்படுகிறது.
தேவனுடைய வார்த்தையானது தெளிவாக, நாம் தனிமையாக இருப்பதில்லை என்று சொல்லுகிறது. அவர் நம்மை விடுவித்து, தேற்றி, சுகமாக்க விரும்புகிறார். ஆனால் உங்கள் வாழ்விலே வேதனையளிக்கக்கூடிய இழப்புகளை சந்திக்க நேரிடும் போது இந்த எளிய உண்மையை மறந்து போய் விடலாம்.
நீங்கள் தனியாக இருக்கிறீர்கள் என்று நினைக்க வேண்டுமென்று சாத்தான் விரும்புகிறான். அவர்களை ஒருவரும் புரிந்து கொள்கிறதில்லை என்று நீங்கள் நம்ப வேண்டுமென்று அவன் விரும்புகிறான். ஆனால் அவன் பொய்யன். தேவன் உங்களோடு இருக்கிறதோடு கிறிஸ்துவுக்குள் அனேக சகோதர, சகோதரிகளும் நீங்கள் மன ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் அனுபவித்துக் கொண்டிருப்பதை புரிந்து கொள்கின்றனர். (2 கொரி 1:3-4).
இப்போது என்ன நேர்ந்தாலும், நீங்கள் தனிமையாக இருக்கிறதில்லை, இருக்கப் போவதுமில்லை.
நீங்கள் மனக்காயம் அடைந்து கொண்டிருக்கும் போதோ அல்லது வேதனையானது உங்கள் ஆத்துமாவை பிளக்கும் போதோ புரிந்து கொள்ள இயலாமலிருக்கலாம். ஆனால் இந்த ஒரு உண்மையை அறிந்து கொண்டு அதைப் பற்றிக் கொள்ளுங்கள். தேவன் உங்களை நேசிக்கின்றார், உங்களுக்கென்று ஒரு நல்ல எதிர்காலத்தை அவர் வைத்திருக்கின்றார். அவர் மேல் நம்பிக்கையாய் இருங்கள். உங்கள் துக்கத்தை சந்தோசமாக மாற்ற அவரை நம்புங்கள். (ஏசா 61:1-3)
ஜெபம்
தேவனே, என்னுடைய துக்கத்தினாலும், தனிமையினூடேயும் உம்மை என்னால் எப்போதும் காண இயலவில்லை. ஆனால் நீர் என்னை விட்டு விடுகிறதில்லை என்று அறிந்திருக்கிறேன். நீர் சமீபத்திலே இருக்கிறீர் என்பதை நினைத்துக் கொள்ள எனக்கு உதவும். உம்மை அதிகமாக தேட என்னை ஊக்குவிக்கும் கிறிஸ்தவர்களுடன் நட்புறவை தருவீராக.