நீங்கள் களைத்திருக்கிறீர்களா….அல்லது இயேசு உயர்த்தப்பட்டிருக்கிறாரா?

நீங்கள் களைத்திருக்கிறீர்களா….அல்லது இயேசு உயர்த்தப்பட்டிருக்கிறாரா?

“இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்.” – ரோமர் 7:6

கடவுளின் திட்டத்தை பின்பற்றுவதற்குப் பதிலாக தங்கள் சொந்த வழியில் செல்வதே பலர் மன அழுத்தத்திற்குள்ளாவதற்கு ஒரு முக்கிய காரணம் என்று நான் நம்புகிறேன். நாம் எதில் ஈடுபட வேண்டும், எங்கு செலவிட வேண்டும் என்பதில் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலை நாம் பின்பற்ற வேண்டும். அவர் ஆம் என்று சொல்லும்போது ஆம், இல்லை என்று சொல்லும்போது இல்லை என்று சொல்ல நாம் கற்றுக்கொள்ள வேண்டும். தேவனுடைய வழிநடத்துதலுக்கு நாம் கீழ்ப்படிந்தால், அவர் நமக்குக் கொடுத்ததை செய்து சமாதானமாக வாழ முடியும்.

ரோமர் 7:6 கூறுகிறது, “ஆவியின் தூண்டுதல்களால்” நாம் வழிநடத்தப்பட வேண்டும். நான் சோர்வாக இருந்த போது, பரிசுத்த ஆவியானவர் என்னை இளைப்பாற சொன்ன என்ணற்ற சமயங்களை நினைவில் கொண்டிருக்கிறேன்.  நானோ வெளியே செல்லவோ, பிறருடன் இருப்பதையோ தெரிந்து கொள்வேன். பின்னர் நான் மிகவும் களைத்துப் போயிருப்பதற்கு பதிலாக நீர்த்துப் போய் விடுவேன். அப்படியிருப்பவர் பொதுவாகவே மனக்குழப்பமும், பொறுமையுமின்றி இருப்பார்கள்.

பரிசுத்த ஆவியானவரின் தூண்டுதல்களுக்கு நாம் கீழ்ப்படியும்போது, ​​இயேசு உயர்த்தப்படுகிறார். ஆகவே இதை நான் உங்களிடம் கேட்கிறேன்: நீங்கள் களைத்துப்போயிருக்கிறீர்களா… அல்லது இயேசு உயர்த்தப்பட்டிருக்கிறாரா? ஆவியானவரைப் பின்பற்றுங்கள், உங்கள் வாழ்க்கையில் அவரை உயர்த்துங்கள்.


ஜெபம்

தேவனே, உம்முடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய நான் மிகவும் சோர்வாய் இருக்க விரும்பவில்லை. நான் என் வாழ்க்கையில் உம்முடைய திட்டங்களைப் பின்பற்றவும், உம்மை உயர்த்தவும் தேர்வு செய்கிறேன்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon