
“ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.” – ரோமர் 8:1
ஒரு கூட்டத்திலே நான், எத்தனை பேர் தங்கள் வாழ்க்கையை குற்ற உணர்ச்சியுடன் செலவிடுகிறார்கள் என்று கேட்ட போது, குறைந்தது 80% சதவீத மக்கள் தங்கள் கைகளை உயர்த்தினர். நான் குற்ற உணர்வோடிருக்க உருவாக்கப்படவில்லை என்றும் என் வாழ்க்கையை ஆள ஒரு துரோக உணர்வை தொடர்ந்து அனுமதிக்கப் போவதில்லை என்றும் முடிவு செய்யும் வரை நானும் அந்த 80 சதவீதத்தின் ஒரு பகுதியாக இருந்தேன்.
நான் குற்ற உணர்வைப் பற்றிய, கடவுளுடைய வார்த்தையைப் படித்தேன், கடவுள் குற்ற உணர்வின் காரணர் அல்ல என்பதை நான் முழுமையாக நம்பும் வரை அவருடைய குணத்தையும், தன்மையையும் படித்தேன். தேவன் நமக்கு கொடுத்திருக்கும் எதையும் தடுக்கத்தக்கதாக, ஊடுறுவும் காரியமாக குற்றவுணர்வை காண்கிறேன். குற்ற உணர்விற்கு நம் வாழ்வில் எந்த உரிமையும் இல்லை, ஏனென்றால் இயேசு நம் பாவங்களுக்கும், தவறுகளுக்குமான கிரயத்தை செலுத்தி விட்டார். அது நமக்குள் இருந்தால், அது எங்கிருந்து வந்ததோ அங்கேயே அதை திருப்பி அனுப்பி விட வேண்டும் – அதாவது நரகத்திற்கு!
குற்ற உணர்வு இனி உங்கள் மகிழ்ச்சியைத் திருட அனுமதிக்க மறுக்கவும். நீங்கள் குற்ற உணர்விற்காக உருவாக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கடவுளின் அன்பையும், கிருபையையும் பெறுவதன் மூலம் நீங்கள் அதை அனுபவிக்கும் எந்த நேரத்திலும் கடுமையாக கையாளுங்கள்.
ஜெபம்
பரிசுத்த ஆவியானவரே, நான் குற்ற உணர்விற்காக உருவாக்கப்படவில்லை என்று அறிந்திருக்கிறேன்! ஒவ்வொரு முறையும் குற்ற உணர்வு என்னுள் எழுந்திருக்க முயற்சிக்கிறது. அதை என் கவனத்திற்குக் கொண்டு வந்து நான் மன்னிக்கப்பட்டு விட்டேன் என்றும், இயேசுவின் தியாகத்தால் முழுமையாக்கப்பட்டேன் என்றும் நினைவூட்டுவீராக!