
நீங்கள் இந்த பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷம் தெரியாமல், தேவனுடைய நன்மையும், பிரியமும் பரிபூரணமான சித்தம் இன்னதென்று பகுத்தறிய தக்கதாக, உங்கள் மனம் புதிதாக மறுரூபமாகுங்கள். – ரோமர் 12:2
‘மனதை விரயமாக்குவது பயங்கரமானது’ என்னும் பழமொழியை கேட்டிருக்கிறீர்களா? நம் மனதிற்கு நன்மை செய்யவும், கற்றுக் கொள்ளவும், உருவாக்கவும், யோசிக்கவும், வளரவும் மிகவும் அதிகமான திறன் இருக்கிறது. அதை எவ்வளவு உச்சிதமாக உபயோகிக்க முடியுமோ அவ்வாறு உபயோகிக்காமல் இருப்பது துக்ககரமான காரியமாகும்.
என் மனதிற்குள் என்னை சேதப்படுத்தும் எதிர்மறையான, துன்புறுத்தும், குற்ற உணர்வு அடையச் செய்யும், மன்னியாமல் இருக்கும், வெட்கமான குற்றப்படுத்தும் எண்ணங்களை அனுமதித்த ஒரு காலகட்டம் என் வாழ்வில் இருந்தது. பிரச்சனை என்னவென்றால், என்னுடைய எண்ணங்களை என்னால் கட்டுப்படுத்த முடியும் என்றோ, நான் விரும்பிய, நம்பிய எண்ணங்களை தெரிந்துகொள்ள முடியும் என்றோ அறியாமல் இருந்தேன்.
உண்மை இல்லாத ஏதோ ஒன்றை பற்றி நான் நினைத்துக் கொண்டிருந்ததால், அதை நிறுத்தி விடக்கூடிய வல்லமை எனக்கு இருந்தது என்பதை உணராமல் இருந்தேன். எதைப் பற்றி சிந்திப்பது என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடியும் என்று எவரும் எனக்கு எப்போதும் சொல்லிக் கொடுக்கவில்லை. உங்களுக்கு யாராவது எப்போதாவது சொல்லியிருக்கிறார்களா? இல்லையென்றால் உங்கள் சிந்தனைகள் உங்களை கட்டுப்படுத்துவதை அனுமதிக்க வேண்டியதில்லை. தேவனுக்கேற்ற சிந்தனைகளை நீங்கள் தெரிந்து கொண்டு அதில் கவனம் செலுத்தலாம் என்று இன்று உங்களுக்கு சொல்லுகிறேன்!
ரோமர் 12:2 சொல்வதாவது நீங்கள் சிந்திக்கும் முறையை மாற்றுவதின் மூலம் தேவன் உங்களை மறுரூபப்படுத்த அனுமதியுங்கள். உங்கள் மனதில் ஏற்படும் போரில் நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அது செயல் முறையில் எப்படியாக காணப்படுகிறது?
எண்ணற்ற சமயங்களில் எனக்கு உதவியதும், உங்களுக்கும் உதவும் என்று நான் அறிந்திருக்கிறது இதோ: அடுத்த முறை நீங்கள் உங்கள் மனதிலே போராடிக்கொண்டிருக்கும் போது, அதை நிறுத்திவிட்டு, தேவனுக்கு நன்றி செலுத்த ஏதாவது ஒன்றை கண்டுபிடியுங்கள். அவருடைய நன்மைகளுக்காகவும், உங்கள் வாழ்க்கையை பலவழிகளில் அவர் ஆசிர்வதித்து இருப்பதற்காகவும் அவருக்கு நன்றியோடு இருப்பதாக சொல்லுங்கள். இதை செய்ய நீங்கள் ஜாக்கிரதையாக இருக்கும்போது, உங்கள் வாழ்க்கை மாறுவதையும் காரியங்கள் மேம்படுவதையும் காண்பீர்கள்.
என்னுடைய நம்பிக்கையும், ஜெபமும் என்னவென்றால், தேவன் உங்களுக்கு கொடுத்திருக்கும் வல்லமையை நீங்கள் அறிந்து கொண்டு, ஒவ்வொரு நாளும் உங்கள் சிந்தையிலே, உங்கள் மேல் அவர் வைத்திருக்கும் அன்பின் நிறைவில் நீங்கள் நடக்க வேண்டும் என்பதேயாகும்!
ஜெபம்
தேவனே, என்னுடைய சிந்தையிலே நான் உம்முடைய வல்லமையை அனுபவிக்க விரும்புகிறேன். என்மேல் நீர் கொண்டிருக்கும் உம் நன்மையையும், நேசத்தையும் கவனித்து நோக்க விரும்புகிறேன். எத்தகைய எதிர்மறையான எண்ணங்கள் ஏற்பட்டாலும், நீர் அவற்றை விட பெரியவர், சிறந்தவர் என்பதை அறிந்திருக்கிறேன்.