“நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.” – ரோமர் 5:8-9
தேவன் உங்களை நேசிக்கும் அளவு நீங்கள் நல்லவராக இருக்கின்றீர்களா என்று எப்போதாவது யோசித்திருக்கின்றீர்களா? அனேகர் அவர்கள் தவறு செய்யாமலிருக்கும் போது தான் தேவன் அவர்களை நேசிப்பதாக நம்பிக் கொண்டிருக்கின்றனர்.
ஒரு வேளை இத்தகைய எண்ணம் தான் சங்கீதக்காரன் மனுஷனை நீர் நினைப்பதற்கு அவன் எம்மாத்திரம் என்று கேட்க வைத்திருக்கும் (சங்கீதம் 8:4). ஆனாலும் வேதம் நாம் தேவனுடைய சிருஷ்டிகளென்றும், அவரது கரத்தின் கிரியைகளென்றும், நம் ஒவ்வொருவரையும் நிபந்தனையின்றி நேசிக்கிறாரென்றும் வேதம் சொல்கிறது. சரி நாம் இதை பார்ப்போம். நீங்கள் அற்புதமானவர்களாக இருப்பதால் இயேசு உங்களுக்காக மரித்தாரா? அவர் உங்களுக்காக மரித்தார் ஏனென்றால் அவர் உங்களை நேசிக்கின்றார். நாம் பாவிகளாக இருக்கையிலே இயேசு நமக்காக மரித்தாரென்று ரோமர் 5:8-9 உறுதிபடுத்துகிறது.
தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை, உங்கள் பாவங்களுக்காக மட்டுமல்ல, அனுதின தவறுகளை மன்னிப்பதற்கும், உங்களுக்காக கொடுத்தார். நீங்கள் ஒவ்வொரு நாளும் வல்லமையாகவும், வெற்றியுடனும் வாழ வேண்டுமென்று விரும்பும் அளவு உங்களை நேசித்தார்.
தேவன் உங்களை நேசிக்கின்றார். இதை நீங்கள் நம்பி எப்போதுமே அவரின் அன்பைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறார்… நீங்கள் தவறுகள் செய்யும் போது கூட.
ஜெபம்
தேவனே, உமது அன்பு நம்ப முடியாததாக இருக்கிறது. உம்மால் எப்படி என்னை நேசிக்க முடியும் என்று என்னால் விளங்கிக் கொள்ள இயலாத சமயத்திலும் கூட நீர் என்னை நேசிக்கிறீர். நான் தவறுகள் செய்யும் போதும் நீர் என்னுடனே இருக்கிறீர். உம்முடைய உண்மையான நிபந்தனையற்ற அன்புக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்.