“ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்து தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்.” – ரோமர் 14:12
அனேகர் தங்கள் வாழ் நாளிலே தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றாமலே இருந்து விடுகின்றனர். ஏனென்றால் அவர்கள் எல்லோரையும் சந்தோசப்படுத்துவதிலே மும்முரமாக இருக்கின்றனர். இந்த உலகம், நீங்கள் உங்கள் வாழ்விலே என்ன செய்ய வேண்டுமென அறிந்திருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் மக்களால் நிரம்பி இருக்கிறது.
ஆனால், வேதம் நீங்கள் எப்படி வாழ்கிறீர்களென்று தேவனிடம் மட்டுமே கணக்கொப்புவிக்க வேண்டும். பிறர் எவரிடமும் அல்ல என்று வேதம் சொல்கிறது. அதனால் தான் ஒவ்வொரு நாளும் நாம் தேவனுடைய கிருபையால் வாழ வேண்டும். அவரை பிரியப்படுத்தும் வகையிலே காரியங்களை செய்ய வேண்டும்.
கூட்டத்தைக் காட்டிலும், உங்கள் இருதயத்தைப் பின்பற்ற தைரியம் கொண்டிருக்கிறீர்களா? அனேக சத்தங்கள் உங்களுடைய நோக்கத்தினின்று உங்களை இழுக்க முயற்சிக்கும் போதும் கிறிஸ்துவின் மேல் நோக்கமாயிருக்கின்றீர்களா?
இந்த உலகிலே இரண்டு விதமான ஜனங்கள் இருக்கின்றனர். ஏதாவது நடக்கட்டும் என்று காத்திருப்பவர்கள், காரியங்களை நடத்துபவர்கள். தேவன் தம்முடைய இராஜ்ஜியத்திற்கென்று பெரிய காரியங்களை செய்யும் படி உங்களை அழைத்திருக்கிறார். அதை நிறைவேற்ற உங்களுக்கு தேவையான அனைத்தையும் கிறிஸ்துவுக்குள் உங்களுக்கு கொடுத்திருக்கிறார்.
எனவே நோக்கத்துடன் வாழுங்கள். மற்றவர்களெல்லாம் என்ன செய்யப் போகிறார்களென்று பார்த்து விட்டு பின்னர் கூட்டத்தைப் பின்பற்றாதீர்கள். உங்களை அனல் மூட்டி எழுப்பி, தீர்மாணித்து செயல்படுங்கள்.
ஜெபம்
தேவனே, உம்மை பிரியப்படுத்தவே நான் உயிர் வாழ விரும்புகிறேன், பிறரை அல்ல. எனக்காக நீர் கொண்டிருக்கும் நோக்கத்துடன் என்னை இணைத்துக் கொள்கிறேன். நான் வெறுமனே அமர்ந்திராமல் உமக்காக நோக்கத்துடன் வாழ்வேன்.