“கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படுமென்றார்.” – லூக்கா 6:38
சிலர் பணத்தையோ அல்லது இவ்வுலகப்பிரகாரமான வர்த்தகத்தையோ தேவனுக்கு முன்பாக வைக்கின்றனர். ஆனால் வேதமானது வெளிப்படுத்தின விஷேசம் 18 ஆம் அதிகாரத்திலே நாம் நம் நம்பிக்கையை பணத்தின் மீது வைப்போமென்றால், அது தோற்றுப் போய் விடும். பணத்தை கையாள்வது எளிமையானதே என்று அறிந்திருக்கிறேன். தேவனை விட அதிகம் கொடுக்க முயற்சி செய்யாதீர் (அது முடியாது). அதன் பலன்கள் ஆச்சரியமானவையாக இருக்கும்.
நாம் எவ்வளவு அதிகமாக கொடுக்கிறோமோ, எவ்வளவு அதிகமாக பொருளாதாரத்தில் கீழ்படிகிறோமோ அவ்வளவு அதிகமாக அவர் நம்மை ஆசீர்வதிக்கின்றார். நாம் மற்றவர்களுக்காக அதிகம் செய்யும் போது, நாம் முன்பை விட அதிக சந்தோசமாகவும், அதிக நிறைவுடனும் இருக்கிறதை கண்டறிவோம்.
சமுதாயமானது, எல்லவற்றையும் உலகப்பிரகாரமான காரியங்களிலே முதலீடு செய்யவும், அதிக பணம் சேர்க்க எந்நேரமும் உழைக்க வேண்டுமென்று கூறுகிறது. ஆனால் அப்படி நாம் செய்யும் போது, உண்மையாகவே இருக்க வேண்டிய எதையும், விஷேசமாக சந்தோசத்தை நாம் பெற்றிருக்க மாட்டோம். நாம் கொண்டிருக்கிற பணத்தை அனுபவிக்கவும் மாட்டோம்.
உலகப்பிரகாரமான அமைப்பிலே இது விளங்கிக் கொள்ளக் கூடாததாக இருக்கலாம். ஆனால் தேவன், நீங்கள் சும்மா பணத்தை சம்பாரித்து, சேர்த்து வைக்க வேண்டுமென விரும்புகிறதில்லை. தேவன், அவற்றை கொடுத்து விடுவதின் மூலம், கடைசியிலே அதிகம் பெற்றிருப்பீர்களென்று சொல்கிறார். இன்று, கொடுக்கும் தண்மையை அதிகமாக்கிக் கொள்ள உங்களுக்கு சவால் விடுகிறேன். என்னை நம்புங்கள் – நீங்கள் தேவனை விட அதிகம் கொடுக்க இயலாது.
ஜெபம்
தேவனே, என்னுடைய பொருளாதாரத்திற்கான உம்முடைய திட்டம் இந்த உலக திட்டத்தைப் போன்றது இல்லை என்பதை அறிந்திருக்கிறேன். ஆனால் நீர் சொல்லுகிறபடி நான் கொடுக்கும் போது நீர் என்னை பராமரித்துக் கொள்வீர் என்று அறிவேன். என்னுடைய பணம் உம்முடையது. உகந்தது என்று நீர் காண்கிறபடி அதை நான் உபயோகிப்பேன்.