“ஆகையால் ஒருவன் இவைகளை விட்டு, தன்னைச் சுத்திகரித்துக் கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும் எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்.” – 2 தீமோ 2:21
வேதாகமம் நம்மை மண்பாண்டம் அல்லது உடைந்து போகக்கூடிய மனித பாத்திரங்கள் என்று குறிக்கிறது (2 கொரி 4:7). குயவனின் சக்கரத்தில் உருவாக்கப்படும் மண் பாண்டத்தை போன்று தான் நாமும் களிமண்ணினால் உருவாக்கப் பட்டிருக்கிறோம் (ஏசாயா 64:8). ஆதியாகமம் 2:7 படி, தேவன் ஆதாமை பூமியின் மண்ணினாலே உருவாக்கினார். சங்கீதம் 103:14 சொல்கிறது, நம்முடைய உருவம் இன்னதென்று அறிவார், நாம் மண்ணென்று நினைவு கூறுகிறார்.
நான் பலவீனர்கள் ஆகவும், பரிபூரணம் அற்றவர்களாகவும் இருந்தாலும் கூட, நம் பாத்திரங்களை (நம்மை) தேவனுடைய வார்த்தையாலே நிரப்பும்போது, அவரின் உபயோகத்திற்கு என்று ஊற்றப்பட ஆயத்தமாக இருக்கும். அவரின் ஆசீர்வாத பெட்டகமாக மாறி விடுகின்றோம். நாம் அனைவருமே தேவனுக்கு விலையேறப் பெற்றவர்கள். தேவன் விரிசலடைந்திருக்கும் பாண்டங்களை கூட உபயோகிக்க முடியும்!
முதலாவதாக நாம் கர்த்தருக்கு முழுவதுமாக பரிசுத்தமாக்கப் பட்டிருக்க வேண்டும். 2 தீமோ 2:21. எவன் ஒருவன் தன்னை மேண்மையற்ற, தூய்மையற்ற காரியங்களிலிருந்து சுத்திகரித்து, தன்னை கறை படுத்தும் தொடர்பில் இருந்து வேறு பிரிக்கிறானோ, அவன் மேன்மையான, கனமான நோக்கங்களுக்காக பிரிக்கப்பட்ட பாத்திரமாகவும், எஜமானுக்காக பரிசுத்தமாக்கப்பட்டு உபயோகிக்கப்படத்தக்க பாத்திரமாக, எத்தகைய நற்கிரியைகளையும் செய்ய தகுந்த ஆயத்தம் உள்ளவனாகவும், பாத்திரமாகவும் இருக்கின்றான்.
இன்று, நீங்கள் பிரித்தெடுக்கப்பட்ட பாத்திரமாக மாறும்போது, உங்கள் வாழ்க்கையின் மூலம் நம்ப முடியாத காரியங்களை தேவன் செய்வார்.
ஜெபம்
நான் உம்முடையவன்/வள். உம் பயன்பாட்டிற்கு தகுந்த பாத்திரமாக இருக்க விரும்புகிறேன். என்னையே நான் உமக்கு அர்ப்பணம் செய்கின்றேன். நீர் எனக்காக கொண்டிருக்கும் எல்லா நற்காரியங்களுக்கும், தகுதியாக ஆயத்தமாக இருக்க, உம்முடைய வார்த்தையாலே நிரப்பப்பட விரும்புகிறேன்.