“தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது; அவரால் என் இரட்சிப்பு வரும். அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அதிகமாய் அசைக்கப்படுவதில்லை.” – சங்கீதம் 62:1-2
இப்படி உங்களுக்கு எப்போதாவது நடந்திருக்கிறதா? ஒரு ரப்பர் பேண்டை எதையாவது சுற்றி போட முயன்ற போது, அது முறிந்து போனதுண்டா? வேறொன்று இல்லாமல் அதை இணைத்து உபயோகிக்க முயன்றதுண்டா?
சில நேரங்களில் நம் அன்றாட வாழ்க்கையில், நம் திறனை மீறி நம்மை நீட்டிக்கிறோம், ரப்பர் பேண்ட் போல உடைந்து போவோம். மீண்டும் ஒன்றாக இணைப்பதன் மூலம் சிக்கலை சரி செய்து விடுவோம் என்று நினைக்கிறோம். ஆனால் விரைவில் நாம் அதே நடத்தையில் விழுகிறோம், அது நம்மை முதலில் உடைக்கச் செய்கிறது.
காலப்போக்கில் மீண்டும் மீண்டும் மன அழுத்தத்தை வெளிப்படுத்துவதால், நம் வாழ்க்கை அந்த தேய்ந்து போன ரப்பர் பேண்டை போலாகி விடுகிறது. அது நம்மை முற்றிலுமாக வெறுமையாக்கி விடும். கடவுளின் சட்டங்களையும், நம் வாழ்விற்காக அவர் விதித்த வரம்புகளையும் புறக்கணிப்பது இறுதியில் முற்றிலுமாக சிதைவை ஏற்படுத்தும்.
உங்கள் மனதையும், உணர்ச்சிகளையும், உடலையும் அளவுக்கதிகமான பளுவுக்கு உட்படுத்துவது, இறுதியில் அதற்கான கிரையத்தை கொடுக்க செய்து விடும். ஆனால் அப்படியாக நீங்கள் வாழ வேண்டும் என்று கடவுள் விரும்பவில்லை.
தேவனுடைய கண்ணோட்ட்த்திற்கு ஏற்ப உங்களுடையதை சரி செய்து கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கைக்கான அவருடைய சமாதானத்தையும், வேகத்தையும் நாடுங்கள். உங்கள் சரீரத்திற்கு மதிப்பளியுங்கள். நல்ல ஆரோக்கியத்தை விலைமதிப்பற்ற பரிசாக கருதுங்கள். மன அழுத்தத்தில், கடவுள் உங்களுக்குக் கொடுத்த ஆற்றலை வீணாக்காதீர்கள். வாழ்க்கையை அனுபவிக்க அதை சேமிக்கவும்!
ஜெபம்
கடவுளே, நான் உம்மிலே என் இளைப்பாறுதலை காண விரும்புகிறேன். தொடர்ந்து சென்று மன அழுத்தத்திற்கு ஆளாகாமல், என் வாழ்க்கைக்கான உம்முடைய வேகத்தை எவ்வாறு பின்பற்றுவது என்பதைக் காண்பித்தருள்வீராக.