“நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள், சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது; பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்.” – எபே 4:26-27
எல்லா கோபமும் பாவமா? இல்லை, ஆனால் அதில் சில பாவமே. கடவுள் கூட பாவத்தின் மேலும், அநீதியின் மேலும், முரட்டாடத்தின் மேலும் மற்றும் அற்பமான காரியங்களின் மேலும் நீதியான கோபத்தைக் கொண்டிருந்தார். கோபம் சில நேரங்களில் ஒரு பயனுள்ள நோக்கத்திற்கு உதவுகிறது, எனவே அது எப்போதும் பாவமல்ல.
ஆனால் நாம் மோசமான உணர்வுகளை கொண்டிருப்போமென்பது வெளிப்படையானதே, இல்லையெனில் கடவுள் நமக்கு சுய கட்டுப்பாட்டின் பலனைக் கொடுத்திருக்க மாட்டார். ஏதோவொன்றை செய்ய சோதிக்கப்படுவது பாவமல்ல. அந்த சோதனையை எதிர்க்காமல் அதை நீங்கள் செய்யும் போது தான் அது பாவமாகிறது. அதேபோல், கோபப்படுவது தவறல்ல, ஆனால் அது சில பாவமான செயல்களுக்கு நம்மை வழி நடத்தி விடும்.
கடவுள் சில நேரங்களில் கோபத்தை உணர அனுமதிக்கிறார். ஆனால் நாம் தவறாக நடத்தப்படும்போது அதை உணர்ந்து கொள்வோம். ஆனால் நம் வாழ்வில் உண்மையாகவே அநீதியை அனுபவித்தாலும் நாம் நம்முடைய கோபத்தை முறையற்ற முறையில் வெளிப்படுத்தக்கூடாது. கோபம் நம்மை பாவத்திற்குள் இழுக்காமல் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
எபேசியர் 4:26 நமக்கு சொல்கிறது, கோபப்படும்போது பாவம் செய்யாதீர்கள். உங்கள் கோபம் பாவமல்ல, ஆனால் அது ஒரு பாவமான எதிர்வினையை உருவாக்குவதைத் தடுக்க, அதை கடவுளிடம் கொடுப்பதற்கு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஜெபம்
தேவனே, பாவம் செய்யாமல், கோபத்தை நான் எவ்வாறு கையாள வேண்டுமென்று நீர் விரும்புகிறீரோ அப்படி செய்ய எனக்கு உதவுவீராக. என் கோபத்தின் மீது நான் உமக்கு அதிகாரம் கொடுக்கிறேன். எல்லாவற்றையும் என் நன்மைக்காகச் செய்வீர் என்று நம்புகிறேன்.