
“பின்பு இயேசு நூற்றுக்கு அதிபதியை நோக்கி: நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நாழிகையிலே அவன் வேலைக்காரன் சொஸ்தமானான்.” – மத் 8:13
பல ஆண்டுகளுக்கு முன்பு, எனது கடந்த காலத்தில் நடந்த துஷ்பிரயோகம் காரணமாக நான் மிகவும் எதிர்மறையாக இருந்தேன். இதன் விளைவாக, மக்கள் என்னை காயப்படுத்துவார்கள் என்று நான் எதிர்பார்த்தேன், அவர்கள் அப்படியே செய்தார்கள். மக்கள் நேர்மையற்றவர்களாக இருப்பார்கள் என்று நான் எதிர்பார்த்தேன், அவ்வாறே இருந்தார்கள். நல்லது எதுவும் நடக்கக்கூடும் என்று நம்ப நான் பயந்தேன்.
நல்லது எதுவும் நடக்க எதிர்பார்க்காததால் என்னை மனக் காயத்திலிருந்து பாதுகாப்பதாக நினைத்துக் கொண்டேன். ஆனால் நான் உண்மையிலேயே தேவனுடைய வார்த்தையைப் படித்து, என் வாழ்க்கையை மீட்டெடுக்க தேவனை நம்ப ஆரம்பித்தபோது, என் எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் விட்டு செல்வதை நான் உணர ஆரம்பித்தேன்.
மத்தேயு 8:13 ல், நாம் விசுவாசித்தபடியே நமக்கு நடக்கும் என்று இயேசு கூறுகிறார். எல்லாம் எதிர்மறையானது என்று நான் நம்பினேன். எனவே இயற்கையாகவே பல எதிர்மறையான காரியங்கள் எனக்கு நிகழ்ந்தன. எனக்கு நேர்மறையான காரியங்கள் நடக்க வேண்டும் என்று விரும்புவேன் என்று நான் முடிவு செய்தேன். எனவே நான் தேவன் மீது விசுவாசத்தை வைக்க ஆரம்பித்தேன். அவர் என் வாழ்க்கையில் நேர்மறையான காரியங்களைச் காலப்போக்கில் செய்வார் என்று விசுவாசித்தேன். நான் நேர்மறையான பலன்களைப் பெற்றேன்!
நீங்கள் தொடர்ந்து எதிர்மறையான விஷயங்களை அனுபவித்து வந்து, அது ஏன் என்று யோசிக்கிறீர்களா? ஒருவேளை நீங்கள் வேறுவிதமான காரியங்களுக்காக விசுவாசிக்க ஆரம்பிக்க வேண்டும். கடவுளை நம்பவும், சிறந்ததை பெற்றுக் கொள்வோம் என்று நம்பவும் தொடங்குங்கள். உங்கள் விசுவாசத்தின்படி அவர் உங்களுக்காகச் செயல்படுவதைப் பாருங்கள்.
ஜெபம்
பரிசுத்த ஆவியானவரே, எல்லா எதிர்மறையையும் நீக்கி, சிறந்த விஷயங்களை நம்ப ஆரம்பிக்க விரும்புகிறேன். என் வாழ்க்கையில் நீர் பெரிய காரியங்களைச் செய்ய முடியும் என்று விசுவாசிப்பதின் மூலம், என் விசுவாசத்தை தூண்ட எனக்கு உதவும்.