நெருக்கம் சுதந்திரத்தைக் கொண்டுவருகிறது

நெருக்கம் சுதந்திரத்தைக் கொண்டுவருகிறது

ஆதலால் இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தினபின்பு, நானே அவரென்றும், நான் என்சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள். (யோவான் 8:28)

குறிப்பிட்ட சூழ்நிலைகளில் நான் என்ன செய்ய வேண்டும் என்று பல சந்தர்ப்பங்களில் ஆண்டவரிடம் கேட்டிருக்கிறேன், அதற்கு அவர் சொன்னார், “நீ என்ன செய்ய விரும்புகிறாயோ அதைச் செய்.” முதன்முறையாக அவர் சொல்வதைக் கேட்டபோது, தேவன் எனக்கு அத்தகைய சுதந்திரத்தை தருவார் என்று நம்புவதற்கு பயந்தேன், ஆனால் ஆவிக்குறிய ரீதியில் வளர்ந்து முதிர்ச்சியடையும் போது, அவர் நமக்கு மேலும் மேலும் சுதந்திரம் தருகிறார் என்பதை இப்போது நான் அறிவேன்.

இதைப் பற்றி நான் யோசித்தபோது, நான் செய்ய வேண்டியதெல்லாம் எனது சொந்த குழந்தைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். அவர்கள் இளமையாகவும், அனுபவமில்லாதவர்களாகவும் இருந்தபோது, அவர்களுடைய எல்லா முடிவுகளையும் அவர்களுக்காக நான் எடுத்தேன். அவர்கள் முதிர்ச்சியடைந்த பிறகு, அவர்கள் செய்ய விரும்புவதை இன்னும் அதிகமாகச் செய்ய அனுமதித்தேன். அவர்கள் நீண்ட காலமாக டேவையும் என்னையும் சுற்றி இருந்தார்கள். அவர்கள் எங்கள் இருதயத்தை அறியத் தொடங்கினர். இப்போது எங்களுடைய நான்கு குழந்தைகளும் வளர்ந்துவிட்டார்கள், பெரும்பாலான நேரங்களில் அவர்கள் செய்ய விரும்புவதைச் செய்கிறார்கள், அரிதாகவே எங்களுக்கு எதிராய் கருத்து சொல்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் எங்களுடைய இருதயத்தை அறிந்து அதன்படி செயல்படுகிறார்கள்.

நாம் பல வருடங்கள் கடவுளுடன் நடந்த பிறகே, அவருடைய இருதயம், அவருடைய குணம் மற்றும் அவருடைய வழிகளை அறிந்து கொள்கிறோம். நாம் அவரைப் பின்பற்றுவதில் உறுதியாக இருந்தால், அவருடன் “ஒன்றாகி விடுவோம்”, பின்னர் அவர் நமக்கு அதிக சுதந்திரத்தை அளிக்க முடியும். நாம் ஆவிக்குறிய ரீதியில் வளரும்போது, கடவுளை கனப்படுத்தவும், நாம் செய்யும் எல்லாவற்றிலும் அவருடைய இருதயத்தைப் பிரதிபலிக்கவும், மேலும் மேலும் விரும்புகிறோம். நம்முடைய இருதயம் அவருடைய ஆவியால் நிரப்பப்படுகிறது, மேலும் நம்முடைய ஆசைகள் அவருடன் ஒன்றிணையத் தொடங்குகிறது.

இன்றைய வசனத்தில், பிதா தனக்குக் கற்பித்ததை மட்டுமே இயேசு செய்கிறார், கூறுகிறார் என்று வாசிக்கிறோம். நீங்களும் உங்கள் சொந்த விருப்பத்தினாலோ அல்லது உங்கள் சொந்த ஆசைகள் மற்றும் வலிமையினாலோ எதையும் செய்ய வேண்டாம், ஆனால் உங்கள் ஆசைகள் அவருடன் ஒன்றாக மாறி, அவருடனான நெருக்கத்தை அனுபவிக்க நான் உங்களை ஊக்குவிக்கிறேன்.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: கடவுளின் ஆசைகள் உங்கள் விருப்பங்களாக இருக்கட்டும்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon