“வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று ளங்கப்பண்ணுகிறோம்.” – 2 கொரி 4:2
மக்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி நாம் அதிகம் அக்கறை கொள்ளலாம். அதனால் நாம் முற்றிலும் செயல்படும் திறனை இழந்து விடுவோமென பீதியடைகிறோம். ஆனால் உங்களுக்கு தெரியுமா? நாம் எல்லாவற்றையும் மறைத்து, பரிபூரணர் போன்று நடிக்க முயற்சிப்பதை விட, நாம் உண்மையாக இருக்கும் போது அதற்கான மதிப்பை பெற்றுக் கொள்கிறோம் என்று நினைக்கிறேன்.
மக்கள் என் போதனைகளை கேட்க விரும்புவதற்கான ஒரு முக்கிய காரணம் என்னவென்றால், நான் கற்றுக்கொண்டதை எனது சொந்த பிரச்சினைகள், பலவீனங்கள் மற்றும் தவறுகளின் மூலம் நான் சொல்கிறேன். இது அவர்களது இறுக்கத்தை தளர்த்தவும், என்னுடன் தொடர்பு கொள்ளவும் உதவுகிறது, மேலும் நான் செய்த காரியங்களை அவர்களால் செய்ய முடிந்தால், அது அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது.
தவறு செய்வோம் என்ற பயத்தில் வாழ்வதை நாம் நிறுத்த வேண்டும், ஏனென்றால் நாம் தவறு செய்வோம். தேவன் நம்மிடம் எந்த தவறும் செய்யக் கூடாது என்று சொல்லவில்லை. நாம் நம்முடைய குறைபாடுகளைப் பற்றி நேர்மையாகவும், வெளிப்படையாகவும் இருக்கும்படி அவர் சொல்கிறார். நாம் அவற்றை வெளியே கொண்டு வரும் போது, அவற்றிலிருந்து விடுபட்டு பெரிய மற்றும் சிறந்த காரியங்களுக்குள் செல்ல அவர் நமக்கு உதவுவார்.
உங்கள் தவறுகளை மறைக்க வேண்டாம். அவற்றை வெளியே கொண்டு வாருங்கள். அவற்றிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ளலாம். தேவனை நீங்கள் வெளிப்படையாகவும், நேர்மையுடனும் நம்பும்போது, எதையும் மேற்கொள்ள அவர் உங்களுக்கு உதவுவார்.
ஜெபம்
ஆண்டவரே, நான் வெட்கப்படத்தக்க பெலவீனங்களை கொண்டிருக்கிறேன். ஆனால் அவற்றையே பிடித்துக் கொள்வது எனக்கு எந்த நன்மையும் செய்யாது. வெளிப்படையாக இருக்க விரும்புகிறேன். எனக்கு உதவுவீராக.