
“சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.” – யோவான் 14:27
இயேசு இவ்வுலகத்தை விட்டு சென்ற போது அவர் தமது சமாதானத்தை நம்மிடம் விட்டுச் செல்வதாக சொன்னார். இப்போது நாம் எடுக்க வேண்டிய தீர்மானம் ஆனது, அவர் நமக்கு கொடுத்திருக்கும் சமாதானத்தைலே வாழ்வதை தெரிந்து கொள்வோமா? என்பதே.
ஆம், பிசாசானவன் உங்களை கோபமடைய செய்து, சோர்வடைய செய்ய வேண்டும் என்று கூடுதல் நேரமெடுத்து பணியாற்றிக் கொண்டிருக்கிறான். ஏன்? ஏனென்றால் நீங்கள் சமாதானமாக இல்லாவிட்டால் தேவனிடமிருந்து உங்களால் கேட்க இயலாது என்பதை அறிந்திருக்கிறான்.
உங்கள் வாழ்க்கையை நீங்கள் கவனித்தீர்கள் என்றால், ஒரு வாரத்தில் எத்தனை முறை சாத்தான் உங்கள் சமாதானத்தை திருட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் உங்களை தாக்குகிறான் என்பதை கண்டு ஆச்சரியப்படுவீர்கள். இதை நான் கண்டபோது தேவன் என்னிடம் என் ஆவியிலே, ஜாயிஸ், பிசாசுக்கு உன்னுடைய சமாதானம் அவ்வளவாக தேவைப்படும் என்றால், சமாதானமாக இருப்பதில் ஏதோ ஒரு வல்லமை இருக்கவேண்டும் என்று சொன்னார்.
அது உண்மையே! எனவே இப்போது பிசாசு என் சமாதானத்தை திருட முயலும்போது, அதை பற்றி பிடித்துக் கொண்டு அவனை பழிவாங்குவதில் சந்தோஷப்படுகிறேன். அப்படி என்றால் நான் சோர்வை, ஏமாற்றத்தை உணர மாட்டேன் என்று அர்த்தமாகாது. ஆனால் அதைப்பற்றி ஏதோ நேர்மறையானதை செய்யலாம். நான் என்னை கட்டுப்படுத்திக்கொண்டு சமாதானமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே சமாதானமாக இருக்கலாம்.
சமாதானமாக இருக்கவேண்டும் என்பதற்காகவே சமாதானமாக இருப்பது நமக்காக நாம் செய்து கொள்ள வேண்டிய ஒன்றாகும். தேவனுடைய சமாதானத்தை தெரிந்து கொள்வாயா?
ஜெபம்
தேவனே, உம்முடைய சமாதானத்தை எனக்கு கொடுத்து இருப்பதற்காக உமக்கு நன்றி. பிசாசானவன் என் சமாதானத்தை திருட முயலும் போது அவனது திட்டத்தை எனக்கு காண்பித்தருள்வீராக. அவன் என் சமாதானத்தை திருட அனுமதிக்க மாட்டேன். மாறாக உம்மிலே தானே நான் வேரூன்றி நிலைத்திருப்பேன்.