“இதனால் நான் தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாயிருக்கப் பிரயாசப்படுகிறேன்.” – அப் 24:16
உங்களுடைய மன சாட்சியை தெளிவாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். ஏனென்றால் நீங்கள் உங்கள் வாழ்க்கையை அனுபவிப்பதை, குற்றவுணர்வைப் போன்று வேறு எதுவும் தடுக்காது.
அப்போஸ்தலர் நடபடிகையிலே பவுல், அவர் தேவனுக்கு முன் குற்றமற்று நடப்பதற்காக, ஒழுக்கக்கட்டுப்பாட்டை தொடர்கிறேன், உலக ஆசைகளை தவிர்க்கிறேன் என்று கூறுகிறார். நமக்கும் அது பொருத்தமானதாக இருக்கிறது. தெளிந்த மன சாட்சியுடன், உறுதியுடன் நடப்பது நம்மை சந்தோசமாகவும், விடுதலையோடும் வைத்துக் கொள்கிறது.
இது சரி, இது தவறு என்று தெளிவாக சொல்லக்கூடிய காரியங்களைப் பொறுத்த வரை அது சுலபமானதாகத் தெரிகிறது. ஆனால் அறியப்படாத காரியங்களைக் குறித்து என்ன? சரியான தேர்வு, தவறான தேர்வு என்று நிச்சயமாயிராத காரியங்களைப் பற்றி நம் மன சாட்சியை எப்படி தெளிவாக வைத்துக் கொள்வது, நாம் பாவம் செய்து விட்டோமென்றால் என்ன செய்வது? தேவனுடைய பகுத்தறிவானது இப்படிப்பட்ட பிரச்சினைகளை தீர்க்கிறது என்பதை கண்டு கொண்டேன்.
பகுத்தறிவானது ஆவிக்குறிய விளங்கிக் கொள்ளுதலாகும். ஒரு தெளிவான மனசாட்சியோடு வாழ்வதற்கு அதுவே திறவுகோல். இதற்கு பயிற்சி தேவை, ஆனால் இது உங்கள் இருதயத்தில் கவனம் செலுத்துவதைப் பற்றியதாகும். பின்னர் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும் காரியங்களை செய்யக்கூடாது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளும் படி தேவன் செய்வார்.
உங்கள் மன சாட்சியை சுத்தமாக வைத்துக் கொள்ளும் வகையிலே நீங்கள் வாழ வேண்டுமென்று உங்களை உற்சாகப்படுத்துகிறேன். செய்யக்கூடாது என்று நீங்கள் அறிந்திருக்கும் காரியங்களை செய்யாதீர். உங்களுக்கு தெளிவாகத் தெரியாத காரியங்களை நீங்கள் சந்திக்கும் போது தேவனுடைய பகுத்தறிவை சார்ந்திருங்கள். அவர் உங்களை ஒருபோதும் தவறாக நடத்த மாட்டார்.
ஜெபம்
தேவனே, உம்முடைய பகுத்தறிவுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். உமக்கு முன்பாக என் மனசாட்சியை சுத்தமாக வைத்துக் கொள்ளும் வகையிலே நான் வாழத்தக்கதாக என் இருதயத்திலே நீர் சொல்லும் அந்த மெல்லிய குரலை கவனிக்க எனக்கு உதவுவீராக