“ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார். கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும்,” – ஏசாயா 11:2-3
இயேசு தம் ஜீவியத்தை பகுத்தறிவதின் மூலம் நடத்தினார். அவருடைய பகுத்தறிவானது மேலோட்டமான மாம்ச உணர்வை சார்ந்த்தாயிராமல், அவருடைய பிதாவாகிய தேவனோடு அவர் கொண்டிருந்த நெருக்கமான ஐக்கியத்தின் விளைவாக இருந்தது.
இதே பகுத்தறியும் வரம், அவரோடுள்ள உறவினால் உங்களுக்கும் எனக்கும் இருக்கிறது. எனவே இது எப்படி கிடைக்கும்? நீங்கள் ஒன்றை செய்வதற்கு முன்பு அது சரியானதா என்பதை உங்கள் ஆவியுடன் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு அதைப் பற்றி சமாதானம் இருக்குமேயென்றால் அதைத் தொடருங்கள். ஆனால் அதைப் பற்றி நீங்கள் அசவுகரியமாகவோ, குழப்பமாகவோ, விரக்தியாகவோ உணர்வீர்களென்றால் அமைதியாக தரித்திருங்கள்.
உதாரணமாக, சில சமயங்களிலே நான் பெரிய வணிக வளாகத்திலே ஏதோவொன்றை வாங்குவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருப்பேன். ஆனால் இறுதியாக அதற்கு பில் போடும் முன்பதாக என் ஆவியிலே ஒரு விதமான விரக்தியை உணர்வதுண்டு. அது, அந்தப் பொருளை வாங்காதே என்று பரிசுத்த ஆவியானவர் என்னை தட்டி சொல்வதைப் போன்றிருக்கும்.
இதைப் போன்ற சமயங்களின் சுவாரஸ்யம் என்னவென்றால், ஒவ்வொரு முறையும் பரிசுத்த ஆவியானவரின் தூண்டுதல்களைக் கேட்டு அதைப் பின்பற்ற நீங்களும் நானும் தெரிந்து கொள்ளும் போது, நம் ஆவியானது தேவனுக்குள்ளாக பெலனடைகிறது. மேலும் நம் வாழ்விலே நாம் ஆவியின் கனியிலே செயலாற்றும் படி தேவனுடைய வல்லமையானது அதிகமாக வெளிப்படுகிறது.
பரிசுத்த ஆவிக்கு இணங்கி, அவருடைய தூண்டுதல்களைப் பின்பற்றுங்கள். அப்போது இயேசு கடந்த அதே பகுதியில் நீங்களும் வளர்வீர்கள்.
ஜெபம்
தேவனே, என்னுடைய சொந்த மேலோட்டமான அல்லது சுயனலமான விருப்பங்களை சார்ந்து தீர்மாணங்களை எடுக்க நான் விரும்பவில்லை. நான் பகுத்தறிவிலே நடக்க விரும்புகிறேன். நான் தீர்மாணங்களை எடுக்கையிலே உம்மிடம் வரும் போது, உம்முடையதல்லாத விருப்பங்களை விரக்தியடையச் செய்து, உம்முடைய வழியைப் பின்பற்ற சமாதானத்தை தருவீராக.