“தரித்திரருக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையான்; தன் கண்களை ஏழைகளுக்கு விலக்குகிறவனுக்கோ அநேக சாபங்கள் வரும்.” – நீதி 28:27
பணத்தை கையாள்வதற்கான சிறந்த வழி, கொடுக்க வேண்டும் என்பதை நான் கண்டுபிடித்துள்ளேன். நெருக்கடியான காலங்களில் கூட நாம் தொடர்ந்து கொடுக்க வேண்டும். நம் பொருளாதாரத்திலே வேதாகமத்தை சார்ந்திருக்க உதவும் முக்கியமான காரியம் இதுவே.
கடினமான காலங்களில் கூட, தேவனின் பொருளாதார அடிப்படையில் வாழ்வது எப்போதும் சாத்தியமாகும். கொடுக்கவே இயலாத சூழ்னிலையில் நீங்கள் இருக்கலாம், ஆனால் அது உங்களை தடுத்த நிறுத்த அனுமதிக்க வேண்டாம். உங்களிடம் உள்ளதை கொண்டு நீங்கள் செய்யும்போது, கடவுள் உங்களுக்கு உதவுவார்.
நாம் சிறிய காரியங்களில் உண்மையுள்ளவர்களாகவும், நம்பத்தக்கவர்களாகவும் இருக்கும் போது தேவன் நம்மேல் பிரியமாயிருக்கிறார் என்று லூக்கா 19:17 சொல்கிறது. நாம் அப்படி இருக்கும் போது, பெரிய காரியங்களின் மேல் அவர் நமக்கு அதிகாரம் தருவார் என்றும் கூறுகிறது.
நீதிமொழிகள் 28:27 கூறுகிறது, ஏழைகளுக்குக் கொடுக்கிறவனுக்கு குறைவிருக்காது… நாம் நம் பொருளாதாரத்தைக் கொண்டு தேவனுக்கு கீழ்ப்படியும் போது, நம்மிடம் அதிகம் இல்லாதபோதும், மற்றவர்களுக்கு உதவும் போதும், கடவுள் நமக்குத் தேவையானதை வழங்குவார். இது மிகவும் எளிது. கொடுப்பவராக இருக்க தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு ஒரு குறைவும் இருக்காது.
ஜெபம்
கடவுளே, எனது பொருளாதாரத்தை உம்மிடம் கொடுக்க நான் இன்று தேர்வு செய்கிறேன். கடினமான காலங்களில் கூட, உம்முடைய பொருளாதாரக் கொள்கைகள் இன்னும் செயல்படுகின்றன என்பதை நான் அறிவேன். நீர் என்னை பார்த்துக் கொள்வீர். நீரே என் ஆதாரம்!