“மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்.” – ரோமர் 8:8
நாம் நம் உணர்ச்சிகளையல்ல, பரிசுத்த ஆவியானவரையே பின்பற்ற வேண்டும். ஆயினும் அனேகர் நம் உணர்ச்சிகள் எவ்வாறு செயல்படுகிறது என்பதையே அறியாதவர்களாக இருக்கின்றனர். நம் உணர்ச்சிகள் நம் ஆத்துமாவிலிருக்கிறது, நம் ஆத்துமா, சிந்தை, சித்தம், உணர்ச்சிகளாலானது. அது நாம் என்ன நினக்கிறோம், உணர்கிறோம், விரும்புகிறோம் என்பதை சொல்கிறது. இந்த மூன்று காரியங்களில் உணர்ச்சிதான் துரிதமாக தூண்டப்படுகிறது.
வேறு வார்த்தைகளிலே, நம் ஆவியிலே இருக்கும் பரிசுத்த ஆவியின் ஞானமும், பகுத்தறிவும், உணர்ச்சிகளின் கதறலில் மூழ்கி விடும். வேதம், இந்த ‘மாம்ச ஜீவியம்’ தேவனைப் பிரியப்படுத்துகிறதில்லை என்று கூறுகிறது. அப்படியென்றால் தேவன் நம்மை நேசிக்கிறதில்லை என்று அர்த்தமாகாது. அதின் அர்த்தம் என்னவென்றால், மாம்சபிரகாரமான நடத்தையால் அவர் திருப்தியடைகிறதில்லை, அதை ஏற்றுக் கொள்கிறதும் இல்லை என்பதே.
ஆயினும், உணர்ச்சிகள் எவ்வளவு எதிர்மறையாக செயல்படுகிறது என்பதை நீங்கள் ஒருமுறை புரிந்து கொண்டால், அவற்றை நீங்கள் மேற்கொள்வீர்கள். நம் ஆத்துமா பெலனுள்ளதாக இருக்கலாம், ஆனால் தேவனுடைய பிரசன்னத்தில் நேரம் செலவிடுவதின் மூலம் நம் ஆவியை பெலப்படுத்துவோமேயென்றால், அவை ஆத்துமாவை விட பெலனுள்ளதாகி விடும். இன்றே வார்த்தையை ஏற்றுக் கொண்டு உங்கள் ஆவிக்கு, உங்கள் உணர்ச்சிகளை மேற்கொள்ள பெலனளியுங்கள்.
ஜெபம்
தேவனே, என் உணர்ச்சிகள், என் ஆவியை மேற்கொள்ள அனுமதிக்க விரும்பவில்லை. நான் உம்மோடு நேரம் செலவழித்து, உம்முடைய வார்த்தையைப் படிக்கையிலே நான் எப்படி உணர்கிறேனோ அப்படி இல்லாமல், ஆவியிலே நடத்தப்பட தேவையான பெலனை எனக்கு தருவீராக.