பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்! (லூக்கா 11:13)
இன்றைய வசனம், தேவன் தம்மிடம் கேட்பவர்களுக்கு பரிசுத்த ஆவியைக் கொடுப்பார் என்று உறுதியளிக்கிறது. நீங்கள் இருக்கும் இடத்திலேயே உங்களை நிரப்பவும், பரிசுத்த ஆவியில் ஞானஸ்நானம் கொடுக்கவும் அவரிடம் நீங்கள் கேட்கலாம். இந்த ஜெபத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்:
“பிதாவே, ஆவியானவரால் நிரப்பப்படுவதற்குத் துணை செய்யும். எல்லா அடையாளங்களோடும் என்னை பரிசுத்த ஆவியில் ஞானஸ்நானம் செய்யும்படி இயேசுவின் நாமத்தில், நான் உம்மிடம் கேட்டுக் கொள்கிறேன். பெந்தெகொஸ்தே நாளில் நிரப்பப்பட்டவர்களைப் போலவே, எனக்கும் தைரியத்தைத் தந்தருளும், மேலும் நான் பெற விரும்பும் மற்ற ஆவிக்குரிய வரங்களை எனக்குக் கொடுத்தருளும்.”
இப்போது, “நான் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருக்கிறேன் என்று நம்புகிறேன், இனி நான் இப்பொழுது இருப்பதைப் போல் இருக்க மாட்டேன்” என்று உரத்த குரலில் கூறி உங்கள் விசுவாசத்தை நீங்கள் உறுதிப்படுத்தலாம்.
மேலே உள்ள ஜெபத்தையோ அல்லது அதுபோன்ற ஒரு ஜெபத்தையோ நீங்கள் ஜெபித்திருந்தால், அமைதியாக கடவுளிடம் காத்திருந்து, நீங்கள் கேட்டதை பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்று நம்புங்கள். நீங்கள் பெற்றுக் கொண்டதாக நம்பவில்லை என்றால், நீங்கள் பெற்றிருந்தாலும், அதைப் பெறாதது போல் தான் உங்களுக்கு இருக்கும். நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு, உங்கள் முடிவை எடுக்காமல், நீங்கள் பெற்ற நம்பிக்கையின் மூலம், விசுவாசத்தின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். நாள் முழுவதும், தேவன் உங்களில் வாழ்கிறார் என்பதையும், அவர் மூலம் நீங்கள் செய்ய வேண்டிய எல்லவற்றையும் செய்ய முடியும் என்பதையும் தியானியுங்கள்.
பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படுவது ஒரு விசுவாசிக்கு நிகழக்கூடிய மிக அற்புதமான காரியங்களில் ஒன்றாகும். அவருடைய பிரசன்னம் உங்களுக்கு தைரியம், நம்பிக்கை, சமாதானம், மகிழ்ச்சி, ஞானம் மற்றும் பல அற்புதமான காரியங்களைத் தருகிறது. தினமும் உங்கள் முழு இருதயத்தோடும் அவரைத் தேடுங்கள்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: நீங்கள் கடவுளை அவருக்காகவும், அவருடைய பிரசன்னத்தின் மகிழ்ச்சிக்காகவும் தேடுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், அவர் உங்களுக்காக என்ன செய்ய முடியும் என்பதற்காக அல்ல.