“துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து.” – எபே 5:18
சாத்தான் நம்மை பாவத்திற்கு தூண்டுகிறான் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஒரு விதத்தில், தேவனும் நம்மை “சோதிக்கிறார்”, அவர் நம்மை நண்மை செய்ய சோதிக்கிறார்.
அவர் அவ்வாறு செய்யும்போது, சாத்தான் பெரும்பாலும் நம் மனதைத் தாக்குகிறான். அதை நாம் செய்யாமலிருக்க பல காரணங்களை சொல்லுவான். நாம் அதிலே விழுந்து விடுவோமென்றால், நாம் நண்மை செய்யும் வாய்ப்பையும், ஆசீர்வாதமாயிருக்கும் வாய்ப்பையும் நம்மிடமிருந்து திருடி விடுகிறான்.
நாம் தவறு செய்வதற்கான சோதனையை எதிர்ப்பதை விட, சரியானதைச் செய்வதற்கான சோதனையை அதிகமாக எதிர்ப்பது போல் தோன்றும். ஆனால் அது அப்படி இருக்க வேண்டியதில்லை.
யாக்கோபு 4:7 கூறுகிறது, தேவனுக்கு அடங்கியிருந்து பிசாசை உறுதியாக எதிர்த்து நில்லுங்கள், அப்போது அவன் உங்களை விட்டு ஓடிப் போவான் என்று சொல்லுகிறது. இதில் இரண்டு காரியங்கள் இருக்கிறது. கடவுளுக்கு அடிபணியாமல் நீங்கள் பிசாசை எதிர்க்க முடியாது. பிசாசை எதிர்க்காமல் நீங்கள் கடவுளுக்கு அடிபணிய முடியாது.
பரிசுத்த ஆவியினால் எப்போதும் நிரப்பப்பட்டு, தூண்டப்பட்டு இருக்க வேண்டும் என்று எபேசியர் 5:18 சொல்கிறது. நீங்கள் ஆவியால் நிறைந்திருக்கும்போது, நீங்கள் உங்களை தேவனிடம் சமர்ப்பிக்கிறீர்கள். பின்னர் பிசாசை எதிர்த்து நீங்கள் வெற்றி பெற முடியும்.
ஜெபம்
தேவனே, உம்முடைய பரிசுத்த ஆவியினால் என்னை நிரப்பும். நான் என்னை உம்மிடம் சமர்ப்பிக்கிறேன். நான் இன்று நன்மை செய்து மக்களை ஆசீர்வதிக்க பரிசுத்த ஆவியானவரின் தூண்டுதலைப் பின்பற்ற விரும்புகிறேன்.