“எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.” – 1 தெச 5:18
நாம் எப்போதுமே நன்றியுள்ளவர்களாக இருக்கும் படி வேதம் நம்மை உற்சாகப்படுத்துகிறது. தேவன் நம் ஜெபங்களுக்கு பதில் அளித்து, நம் பிரச்சினைகளிலிருந்து நம்மை விடுவிக்கும் போது, அவ்வாறு இருப்பது சுலபமானது. ஆனால் காரியங்கள் நன்றாக இருக்கும் போது அது சுலபமாக இருக்கிறதில்லை. எனவே பாடுகளின் நடுவிலும் எப்படி நன்றியோடிருப்பது?
நாம் தெரிந்து கொள்ள இரண்டு காரியங்கள் உண்டு. முதலாவதாக நம்முடைய வாழ்விலே என்ன நடந்து கொண்டிருந்தாலும், நாம் தேவனைத் துதிக்கலாம். இதை வேறு விதமாக சொல்ல வேண்டுமென்றால், நாம் பாடுகள், கஷ்டத்தின் நடுவிலும், நாம் தேவனுடைய நிலையான அன்பையும், உண்மைத்தண்மையையும், நம் வாழ்விலே தவறாக இல்லாமலிருக்கும் காரியங்களையும் குறித்து சந்தோசப்படலாம்.
இரண்டாவது, நாம் தேவனிடம், தேவனே இதிலிருந்து நான் என்ன கற்றுக் கொள்ள வேண்டும்? நான் உம்மிடம் நெருங்கி வரவும், உமது நண்மையிலே இன்னும் அதிகமாக சந்தோசப்படவும், இதன் மூலமாக எனக்கு என்ன கற்றுக் கொடுக்க விரும்புகிறீர்? இவை இரண்டும் எளிமையான கேள்விகள் இல்லை. இதற்கான பதிலை கேட்பது கடினம்.
சில சமயங்களிலே வாழ்க்கையின் முக்கியமான பாடங்களை நாம் கடினமாக சமயங்களினூடே செல்லும் போது தான் புரிந்து கொள்வோம். கடினமான காரியங்கள் உங்களை சிறப்பான காரியங்களுக்குள்ளாக நடத்தி செல்வதற்காக நன்றி செலுத்துங்கள்.
பாடுகளின் மத்தியிலும் தேவனுக்கு நன்றி செலுத்தி, அவர் உங்களை இன்னும் பெரிதான, சிறப்பான காரியங்களுக்குள்ளாக நடத்தும் படி அவரை நம்புங்கள்.
ஜெபம்
தேவனே, உம்முடைய அன்பிற்காகவும், பிரசன்னத்திற்காகவும் நன்றியோடிருக்கிறேன். காரியங்கள் நன்றாக இராத போது முறுமுறுத்ததற்காக என்னை மன்னியும். என் வாழ்வில் எத்தனை காரியங்கள் சரியாக இருக்கிறது என்பதை எனக்கு நினைவூட்டும். உம்மிலே நான் என்றுமே களிகூற விரும்புகிறேன்.