
“ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.” – மத் 7:14
தேவனைப் பின்பற்றுவது‘இடுக்கமான’ பாதை வழியாக நடப்பதாகும். சவாலானவற்றை சந்திப்பதாகும். அதன் நடுவில் நாம் முன்னேறி செல்வதற்கு கற்றுக் கொள்ள வேண்டிய சில காரியங்கள் இதோ
- தேவனுடைய வார்த்தையானது என் வாழ்க்கைக்கான எல்லைக் கோடாகும்வேதத்திலே விதிக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளுக்குள்ளாக நாம் நிலைத்திருக்கும் வரை, நான் என்ன செய்ய வேண்டுமென்றும், அதை செய்ய கிறிஸ்துவுக்குள்ளாக என்ன பெற்றிருக்க வேண்டுமோ அதைப் பற்றிய ஞானத்தையும், விளங்கிக் கொள்ளுதலையும் நாம் பெற்றிருக்கிறோம். தேவன் உண்மையுள்ளவர், வார்த்தை மாறாதவர்.
- நான் தொடங்கியதை முடிக்க விருப்பமுள்ளவளாக இருக்க வேண்டும் தேவன் தங்கள் உணர்ச்சிகளால் நடத்தப்படாத, அர்பணித்த மக்களை உபயோகிக்கின்றார். ஆரம்பத்திலே காரியங்கள் எல்லாம் புதியதாக இருக்கும் போது, புத்துணர்வுடன் இருப்பது சுலபமே. ஆனால் முடிவுக் கோட்டை தாண்டுபவர்களோ அவ்வாறு இருப்பது கடினம்.
- எனக்கு உதவி செய்ய ஒருவரும் இல்லாத போதும் நான் இயேசுவை அறிந்திருக்கிறேன். தேவனுக்காக வாழ்வதும், உலகப்பிரகாரமான வழியை ஒத்து வாழாமலிருக்கும் இடுக்கமான பாதையானது, அனேக சமயங்களிலே தணிமையாக இருக்கின்றது. ஆனால் அதனால் ஏற்படும், கிறிஸ்துவுடனான நெருக்கமானது இந்த உலகத்தில் நீங்கள் பெற்றுக் கொள்ளும் அனைத்தையும் விட சிறந்ததே.
இந்த உண்மைகள் எனக்கு உதவியது போல உங்களுக்கும் உதவும் என்று நம்புகிறேன். இடுக்கமான பாதையிலே எதிர்ப்புகள் அனேகமாக இருப்பினும், அந்த பாதையிலே நடப்பதால் ஏற்படும் பலன் அதற்கு தகுதியானதே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஜெபம்
பரிசுத்த ஆவியானவரே, உம்முடைய பாதையாகிய இடுக்கத்தின் பாதை வழியாக பயணிக்க விரும்புகிறேன். நான் முடிவு வரை விடாமல் தொடர என்னை உம்முடைய எல்லைக்குள்ளாக வைத்துக் கொண்டு, எப்படி வாழ்வது என்பதைக் காட்டுவீராக.