“சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.” – யாக் 1:12
சோதனையைப் புரிந்து கொண்டு, அதை வலிமையாக எதிர்ப்பதே, பிசாசை விட ஒரு படி முன்னாக இருக்க வைக்கும் ஒரே வழி என்று நான் நம்புகிறேன். யாக்கோபு 1:12, சோதனையை சகிக்கிற மனுஷன் … அவன் ஜீவ கிரீடத்தைப் பெறுவான்….என்று கூறுகிறது. சோதனையை சகிப்பதென்பது, சோதனைகளின் வழியாக கடந்து சென்று பிசாசை முந்துவதாகும். சகித்துக் கொள்வது என்பது, அது உங்கள் மனப்பான்மையையும், அர்ப்பணிப்பையும் மாற்ற விடாமல் சோதனையின் காலத்தை கடந்து செல்வதாகும்.
இயேசு தாம் சோதிக்கப்பட்ட போது, மக்களை ஒருபோதும் வித்தியாசமாக நடத்தவில்லை, நாம் ஆவிக்குறிய ரீதியில் முதிர்ச்சியடைந்திருக்கும் போது, அவருடைய முன்மாதிரியை நாம் பின்பற்றலாம்.
நாம் சோதனையை எதிர்கொள்வதை இயேசு சரியாக விளங்கிக் கொள்கிறார். சில நேரங்களில் அவர் சோதனையை எதிர்கொள்ள நம்மை அனுமதிக்கிறார். நம் வாழ்வில் பலவீனமான பகுதிகளுக்கு நேராய் கவனம் செலுத்தி அவற்றை மேற்கொள்ள உதவும் படியாகவே அவர் அப்படி செய்கிறார். நீங்கள் பெற்றிருக்க வேண்டுமென்று விரும்பும் அனைத்தையும் பெற்றுக் கொள்ள ஒரே வழி, அவர் உங்களை எப்படி இருக்கும் படி சிருஷ்டித்தாரோ அப்படி மாறுவது தான். அந்த முதிர்ச்சி, சோதனைகளால் தான் வருகிறது.
எனவே பொறுமையாக இருக்கவும், கடவுளின் கிருபையால் சோதனையில் கீழே விழாமல் நிற்கவும் உறுதியாக இருங்கள். அது உங்களை பிசாசை விட ஒரு படி மேலே வைக்கும்.
ஜெபம்
பரிசுத்த ஆவியானவரே, சோதனையின் போது, நீர் என்னுடன் இருக்கிறீர் என்று நான் நம்புகிறேன். எனவே நான் பொறுமையாகவும், வலுவாகவும், எப்போதும் பிசாசை விட ஒரு படி மேலே இருக்க முடியும்.