“பசியுள்ளவனிடத்தில் உன் ஆத்துமாவைச் சாய்த்து, சிறுமைப்பட்ட ஆத்துமாவைத் திருப்தியாக்கினால், அப்பொழுது இருளில் உன் வெளிச்சம் உதித்து, உன் அந்தகாரம் மத்தியானத்தைப்போலாகும்.” – ஏசா 58:10
தேவையிலிருப்பவர்களுக்கும், மனக்காயமடைந்திருப்பவர்களுக்கும் உதவ தேவன் அதிக வாஞ்சையுடன் இருக்கிறார். நான் அவருடைய அன்பிலே வளர்ந்து கொண்டிருப்பதால், பிறருடைய நாளை சிறப்பானதாக மாற்றும் வகையிலே வாழ அதிக மன உறுதியுடன் இருக்கிறேன். தேவனுடைய வாஞ்சை என்னுடைய வாஞ்சையாக மாறி விட்டது.
பிறருக்கு உதவுவது என்பது உதட்டளவில் சொல்வதன்று, அது கிறிஸ்தவ வாழ்க்கையின் முன்னுறிமையாகும்.
பிறருக்கு நாம் உதவி செய்ய, தீர்மாணமும், அர்ப்பணமும் தேவைப்படுகிறது. ஆனால் அப்படியாக நாம் வாழ வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். நாம் உண்மையாகவே பிறருக்கு கொடுத்து, அவர்களுக்காக நம்மை ஊற்றி விடும் போது, அவர் நம்மை உபயோகிப்பார் என்று சொல்லுகிறார். உங்கள் வெளிச்சம் இருளிலே பிரகாசிக்கும், உங்கள் காரிருள் பகலைப் போன்று இருக்கும் (ஏசா 58:10). உங்கள் சூழ்னிலைக்கு அப்பாற் சென்று கிறிஸ்துவினுடைய அன்பை பிறருக்கு கொடுக்கும் போது உங்கள் சந்தோசமும், சமாதானமும் அதிகரிக்கும். நீங்கள் எதிர் கொண்டிருக்கும் போராட்டங்கள் குறைந்து விடும். தேவைப்படும் இடத்தில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்திய திருப்தியை நீங்கள் பெறுவீர்கள்.
எனவே, இதை யோசித்துப் பாருங்கள். தேவனுடைய வாஞ்சையை உங்களுடையதாக மாற்றிக் கொள்ள உங்களுடைய முன்னுறிமைகளை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறதா? பிறருக்கு எப்படி உதவி செய்வது என்றும் எவருக்கு அதிகம் தேவைப்படுகிறதோ அவர்களுக்கு அவருடைய வெளிச்சத்தையும், அன்பையும் எப்படி கொடுப்பது என்பதையும் காட்டும் படி கேளுங்கள்.
ஜெபம்
தேவனே, உமது வாஞ்சை, என்னுடைய வாஞ்சையாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். நான் எப்படி பிறருக்கு உதவ வேண்டுமென்று விரும்புகிறீரோ, அப்படியாக நான் உதவ, என்னுடைய முன்னுறிமைகளை எப்படி நான் மாற்றியமைத்துக் கொள்ள வேண்டுமென எனக்கு காட்டியருளும்.