
“மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.” – எபே 4:24
உங்கள் கடந்த காலத்தில் நிகழ்ந்த வேதனையான விஷயங்கள் அனைத்தும் நடந்து முடிந்திருப்பினும், உங்கள் வாழ்க்கையின் எஞ்சிய ஒவ்வொரு நாளையும் நீங்கள் அனுபவிக்க வேண்டும் என்று கடவுள் இன்னும் விரும்புகிறார். எவ்வாறாயினும், இயேசுவின் மரணமும் உயிர்த்தெழுதலும் உங்களுக்காக சம்பாதித்த அபரிவிதமான வாழ்க்கையைப் பிடித்துக் கொள்ள, நீங்கள் உங்கள் மனதில் தீர்மாணித்தாழிய, அது நடைபெறாது. அதுவரை, பிசாசு எப்போதும் அதை உங்களை விட்டு எடுத்துப் போடவே முயற்சிப்பான்.
இயேசு சொன்னார், திருடன், திருடவும், கொல்லவும், அழிக்கவுமே வருகிறான். ஆனால் நானோ அவர்களுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், பரிபூரணப்படவுமே வந்தேன் என்றார். (யோவான் 10:10). இயேசு இந்த உலகத்திற்கு வந்து நாம் பரிபூரண ஜீவன் பெற்றிருக்கவே மரித்தார்!
அவர் கொடுக்கும் ஜீவனால், நீங்கள் ஒரு புதிய சிருஷ்டியாயிருக்கிறீர்கள். உங்களுக்கு ஏற்பட்ட பழைய காரியங்கள், உங்கள் வாழ்க்கையை தொடர்ந்து பாதிக்க அனுமதிக்காதீர். கிறிஸ்து இயேசுவில், நீங்கள் உங்களுடைய மனதை, கடவுளுடைய வார்த்தையின்படி ஒரு புதிய சிருஷ்டியாக புதுப்பிக்க முடியும். அப்போது உங்கள் உணர்ச்சிகள் சுகமடையும், மறுசீராக்கப்படும். இயேசு உங்களுக்காக சம்பாதித்த அந்த புதிய சுபாவத்திலே நீங்கள் வாழும் போது கடவுளின் நல்ல திட்டமானது உங்களில் வெளிப்படும்.
ஜெபம்
தேவனே, இயேசு எனக்காக சம்பாதித்த அந்த புதிய சுபாவத்தை தினமும் தரித்துக் கொள்ள நான் தேர்வு செய்கிறேன். நான் கிறிஸ்துவில் புதுமையாக்கப்பட்டிருக்கிறேன் – உம்மில் ஒரு மகிழ்ச்சியான, சமாதானமான மற்றும் முழுமையான சிருஷ்டியாயிருக்கிறேன்!