
“மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; மனோதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோம்.” – நீதிமொழிகள் 15:13
எல்லோருக்கும் புன்னகைக்கத் தெரியும். தேவன் நமக்குக் கொடுத்த மிகப் பெரிய ஈவுகளில் இதுவும் ஒன்று. ஒரு புன்னகை மக்களை நன்றாக உணர வைக்கிறது. மேலும் மக்கள் சிரிக்கும்போது மிகவும் அழகாக இருப்பார்கள். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி வெளிப்படையாக இருக்கும்போது, அது மற்றவர்கள் மீது ஒட்டிக் கொள்கிறது. ஆனால் தேவனுடைய சந்தோசத்தை உங்களுக்குள் பூட்டி வைத்துக் கொண்டு, அதை உங்கள் முகத்தில் காட்ட அனுமதிக்காதபோது, உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு இனிமையான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் அனுபவத்தை கொடுக்காமல் தடுக்கிறீர்கள்.
மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது அவர்களின் சூழ்நிலைகளையும், வாழ்க்கையையும் எவ்வாறு மாற்றும் என்பது பெரும்பாலானவர்களுக்கு உண்மையில் புரியவில்லை. கர்த்தருடைய மகிழ்ச்சியுடன் உங்கள் வாழ்க்கையை வாழ்வது எதிர்மறையான, மன சோர்வடைந்த சூழ்நிலைகளைத் துரத்தும். அவருடைய சந்தோசத்தை நம் மனதின் ஆழத்தில் கொண்டிருக்கும் போது, அதை புன்னகைப்பதின் மூலம் வெளிப்படுத்த இயலாமல் இருக்க முடியாது!
புன்னகை என்பது அவ்வளவு முக்கியமான விஷயம் என்று நான் ஒருபோதும் நினைத்திருக்க மாட்டேன். ஆனால் ஒரு எளிய புன்னகை எவ்வளவு புரட்சிகரமானது என்பதை கடவுள் எனக்குக் காட்டினார். சந்தோசத்தை புன்முறுவலின் மூலம் வெளிப்படுத்துவது உங்கள் சொந்த வாழ்க்கையில் நல்ல விஷயங்களைக் கொண்டுவருகிறது. மேலும் தேவனின் மகிழ்ச்சியையும் களிப்பையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறது… எனவே புன்னகையுங்கள்!
ஜெபம்
ஆண்டவரே, தினமும் சிரிக்க நினைவூட்டுங்கள்! நீர் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்திருக்கிறீர், அதைக் காட்டவும், மற்றவர்களின் வாழ்க்கையை பிரகாசமாக்கவும் விரும்புகிறேன்!