“தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர். ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்துபோனாலும்.” -சங்கீதம் 46:1-2
என் வாழ்விலே நான் அநேக புயல்களை அறிந்திருக்கிறேன். அவற்றுள் சில கோடைகாலத்தில் ஏற்படும். மத்தியான புயலை போன்றும் வேறு சில பயங்கரமான புயலைப் போன்றும் இருந்திருக்கிறது.
இத்தகைய புயல்களைப் பற்றி நான் கற்றுக்கொண்டிருப்பதெல்லாம் அவை நிலைத்திராது அல்லது புயலின் நடுவிலே நான் எந்த பெரிய தீர்மானங்களையும் எடுக்க மாட்டேன்.
பிரச்சனைகளின் நடுவில் எண்ணங்களும், உணர்ச்சிகளும் தாறுமாறாக ஓடுகின்றது. ஆனால் அச்சமயங்களில் தான், தீர்மானங்களை ஜாக்கிரதையாக எடுக்க வேண்டும். நான் அடிக்கடி என்னிடமே, தீர்மானம் எடுக்கும் முன் உன் உணர்ச்சிகள் அடங்கட்டும் என்று சொல்லிக் கொள்வேன்.
நான் அமைதியாக இருக்கவும், நம்மால் என்ன செய்ய இயலுமோ அதை செய்வதிலும், நம்மால் செய்ய இயலாததற்காக தேவனை நம்புவதிலும் நம் கவனத்தை வைக்க நம்மை பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும்.
கவலையிலும் பயத்திலும் மூழ்கிவிடாமல் புயலையும் கடந்து பார்த்து பெரிய படத்தை வடிவமைக்கும் தேவனுடன் தொடர்பில் இருங்கள்.
நம் வாழ்க்கையிலே நடக்க வேண்டிய எல்லாவற்றையும் சரியான சமயத்திலே நடக்கும் படியும், சரியான வேகத்தில் நகரும் படியும், நமக்கென்று அவர் திட்டம் பணி வைத்திருக்கிற இடத்திற்கு நாம் பத்திரமாக சென்றடையும் படியும் அவர் பார்த்துக் கொள்வார்.
ஜெபம்
தேவனே, நான் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த இயலாது என்பதை அறிந்திருக்கிறேன். எனவே என்னால் என்ன செய்ய இயலுமோ அதை நான் செய்வேன். என்னால் செய்ய இயலாததற்கு உம்மை நம்புவேன். வாழ்க்கையின் புயல்களெல்லாம் என்னை கட்டுப்படுத்த இயலாது. எனக்கான உம்முடைய திட்டத்தை நான் நம்புகிறேன்.