
“ஏனெனில் இங்கே பெரிதும் அநுகூலமுமான கதவு எனக்குத் திறக்கப்பட்டிருக்கிறது: விரோதஞ்செய்கிறவர்களும் அநேகர் இருக்கிறார்கள்.” – 1 கொரி 16:9
ஒவ்வொரு நாளும் தேவன் நம் இருதயத்தில் புதிய யோசனையைக் கொடுக்கும் போதோ அல்லது ஒரு கனவையோ, தரிசனத்தையோ, சவால்களையோ கொடுக்கும் போது நம்மை எதிர்க்க எதிரி அங்கே இருப்பான்.
தேவன், நம்மை எப்போதுமே புதிய அளவுகளுக்குள்ளாக வரும் படி அழைக்கிறார். சில காரியங்கள் பெரிதாக முக்கியமாக தோன்றும், சிலதோ அவற்றை விட சிறியதாகவோ, முக்கியமற்றதாகவோ காணப்படும். எதுவாக இருந்தாலும், தேவனோடு நாம் ஒரு புதிய அளவை அடையும் போது, நம் எதிரியாகிய பிசாசினிடமிருந்து ஒரு புதிய எதிர்ப்பை நாம் எதிர் கொள்வோம்.
ஆயினும் எதிர்ப்போடு கூட வாய்ப்பும் ஏற்படுகிறது. மேலும் எப்போதுமே தேவன் நம்மோடு இருக்கிறார். எனவே நாம் பயப்படத் தேவையில்லை. சில காரியங்கள் நமக்கு பெரிதாகக் காணப்படலாம். ஆனால் தேவனால் இயலாத காரியம் ஏதுமில்லை. அவர் எதைப் பற்றியும் ஆச்சரியப்படுவதோ, பயப்படுவதோ இல்லை. மேலும் நாம் அவரோடினைந்து எந்த சவாலையும் முறியடிக்கலாம்.
தேவன் உங்களை அழைக்கும் புதிய அளவுகளுக்கு செல்ல தீர்மாணித்து இருப்பீர்களென்றால், எதிர்ப்புகள் வரும் போது விட்டு விடாதீர்கள். மாறாக எதிர்ப்பு எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ அவ்வளவு பெரிதான வாய்ப்பு உங்களுக்கு முன் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ஏனென்றால் அவர் உங்களுடன் எப்போதும் இருக்கிறார்.
ஜெபம்
தேவனே, எதிர்ப்புகள் வரும் போது தடுமாறாத படி காப்பீராக. எனக்காக பெரிய திட்டங்களைக் கொண்டிருக்கிறீர் என்றும் பெரிய எதிர்ப்பு பெரிய வாய்ப்பை அளிக்கிறதென்றும் அறிந்திருக்கிறேன். உம்மை நான் நம்புகிறேன். உம் அன்பால் பிறரை சேவிக்கும் புதிய அளவுகளுக்குள்ளாக என்னை எடுத்துச் செல்ல உம்மால் இயலும் என்று அறிந்திருக்கிறேன்.