
“வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச்செய்கைகளுமுண்டு.” – யாக் 3:16
பொறாமையால் ஏற்பட்ட கோபமே வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முதல் எதிர்மறை உணர்ச்சிகளில் ஒன்றாகும். ஆதியாகமம் 4 சொல்கிறது, காயீன் தன் சகோதரனாகிய ஆபேலைக் கொன்றான் என்று. ஏனென்றால் அவன் கோபமாயிருக்கும் அளவிற்கு பொறாமை கொண்டிருந்தான். இது பொறாமையினால் ஏற்படும் பயங்கரமான விளைவுகளில் ஒன்றாக இருக்கிறது, அது எவ்வளவு ஆபத்தானது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.
இன்றைய சமுதாயத்தில், பலர் தங்கள் மதிப்பு அல்லது முக்கியத்துவத்தை தங்கள் வேலை, சமூக நிலை அல்லது சபையில் தங்கள் ஸ்தானத்தின் அடிப்படையிலேயே உணர்கிறார்கள். இந்த மனநிலையின் காரணமாக, வேறு யாராவது தங்களுக்கு முன்னால் பதவி உயர்வு பெறக்கூடும் என்று அவர்கள் பயப்படுகிறார்கள். பொறாமையானது, அவர்களை மனிதனின் பார்வையில் முக்கியமாக இருக்க முயற்சி செய்கின்றது.
இந்த மனப்பாண்மையுடன், நீங்கள் போராடுகிறீர்களானால், ஒரு காரணத்திற்காக நீங்கள் இருக்கும் இடத்தில், தேவன் உங்களை ஒரு காரணத்திற்காக வைத்திருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அவர் உங்கள் வாழ்க்கைக்கு ஒரு நல்ல திட்டத்தை வைத்திருக்கிறார். அந்த திட்டத்திற்கு நீங்கள் எவ்வாறு தயாராக இருக்க வேண்டும் என்பதை அவர் அறிவார்.
அற்பமான ஆரம்ப நாட்களை அசட்டை பண்ணாதீர்கள். நம்முடைய சந்தோஷமும், நிறைவும்
பொறாமையால் மக்களைக் கவர்ந்திழுக்கும் என்று நீங்கள் நினைக்கும் காரியங்களை பொறாமையுடன் அடைய முயற்சிப்பதால் அல்ல, அது தேவன் நம் வாழ்வில் குறித்த, அழைப்புகளுக்குக் கீழ்ப்படிவதாலேயே ஏற்படுகிறது.
உங்களுக்குள்ளே பொறாமையை வளர விடாதீர்கள். நீங்கள் இருக்க வேண்டிய இடத்தில் உங்களை வைக்க தேவனை நம்புங்கள்.
ஜெபம்
தேவனே, பொறாமை ஆபத்தானது, அபாயகரமானது. அதை நான் பெற்றிருக்க விரும்பவில்லை. எனது அந்தஸ்து, உலகப்பிரகாரமான நிலையையோ அல்லது அங்கீகாரத்தையோ சார்ந்திருக்கிறதில்லை. எனக்கு வேண்டியதெல்லாம் நீர் மட்டுமே.