
“ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி? என் பிள்ளைகளே, வசனத்தினாலும், நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.” – 1 யோவாண் 3:17-18
கிறிஸ்தவர்களாகிய, நம் ஒவ்வொருவருக்கும் தேவன் இரக்கத்தை வைத்திருக்கிறார். ஆனால் அதைப் பெறுவதற்கு நம் இருதயத்தை மூடுகிறோமா அல்லது திறக்கிறோமா என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். நம் இரக்கத்தின் இருதயத்தை உண்மையிலேயே திறந்து வைத்திருக்கும் ஒரு காரியம், இன்று இந்த உலகில் உள்ள தேவைகளைப் பற்றி தீவிரமாக சிந்திப்பதே என்பதை நான் கண்டேன்.
நம்மை விட துர்பாக்கியமான நிலையிலிருப்பவர்களிடம் நம் எண்ணங்களைத் திருப்பி, நம் இருதயத்தை துன்பப்படுபவர்களுக்கு திறந்து கொடுக்க வேண்டும். 1 யோவான் 3:17-18 -ஐ வாசியுங்கள். நான் இந்த வசனங்களை மிகவும் நேசிக்கிறேன். ஏனென்றால் அது நான் ஒரு தேவையைப் பார்க்கும் போது, அது வேறொருவரின் பொறுப்பு என்று என்னால் கடக்கவோ அல்லது தேவை மிகவும் பெரியது என்று நான் நினைக்கவோ அல்லது என்னால் அதைப் பற்றி எதுவும் செய்ய முடியாது, அது உண்மை இல்லை என்று நினைக்கக் கூடாது என்று குறிப்பாக கூறுகிறது.
எங்கள் ஊழியத்தில் நீங்களும் நானும் எல்லாவற்றையும் செய்ய முடியாது என்றாலும் ஏதாவது செய்ய முடியும் என்பதை நான் கண்டறிந்திருக்கிறேன். நாம் செய்யக்கூடிய அந்த ஒன்று மக்களுக்கு நம்பிக்கையைத் தருகிறது.
உலகெங்கிலும் மக்களின் தேவைகளுக்கு உங்கள் இரக்கத்தின் இருதயத்தை இன்னும் விரிவாக திறந்து கொடுக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்.
ஜெபம்
தேவனே, நான் சுயனலமாய், மற்றவர்களின் தேவைகளைப் பற்றி உணராமல் வாழ விரும்பவில்லை. உம்முடைய இரக்கத்தைப் பெற நான் என் இருதயத்தைத் திறக்கிறேன், அதனால் நான் மற்றவர்களுக்கு உதவ முடியும்.