
“போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.” – 1 தீமோ 6:6
வேதம் சொல்கிறது, மனநிறைவுடன் கூடிய தேவ பக்தியே மிகுந்த ஆதாயம். அதிலிருந்து நான் எடுத்துக்கொள்வது, மனநிறைவுடன் இருக்கும் ஒரு பக்திமான், தான் இருக்கவேண்டிய சிறந்த இடத்தில் இருக்கிறான்.
உங்கள் சூழ்நிலைகள் எல்லாம் கட்டுப்பாட்டுடனும், கட்டுக்குள்ளும் இருப்பதால் சந்தோஷம் ஏற்படுவதில்லை; அது உங்கள் இருதயத்தில் இருப்பதால் ஏற்படுகின்றது. உதாரணமாக இந்த உலகம், தங்களுக்கு வேண்டும் என்று நினைத்து அதை பெற்றுக் கொண்டு இருக்கும் மக்களால் நிரம்பி இருக்கிறது. அப்படி இருந்தும் அவர்கள் சந்தோசமாக இருக்கிறதில்லை. உண்மையிலேயே, உலகில் இருக்கும் சில மிகவும் சந்தோசம் அற்றவர்கள், எல்லாமே பெற்றிருக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது
திருப்தி என்பது பெயரோ, புகழோ, எவ்வளவு பணம் இருக்கின்றது, வேலை ஸ்தலத்தில் உங்கள் ஸ்தானம் அல்லது உங்களது சமூக வட்டத்தைப் பொறுத்ததல்ல. அது உங்கள் கல்வி அறிவிலும், உங்கள் பிறப்பிலும் இல்லை. திருப்தி என்பது மனப்பான்மை ஆகும்.
ஒரு உண்மையான, நன்றியுள்ள, மனநிறைவான மனுஷனை விட சந்தோஷமானவர் வேறு எவரும் இல்லை. மனநிறைவு என்றால் ‘என்ன நடந்தாலும் சரி, எந்த காரியமும் உங்களை கலங்க செய்யாமல் திருப்தியுடன் இருப்பது. ஆனாலும் எந்த ஒரு மாற்றமும் தேவையில்லை என்ற நிலையில் திருப்தியாக இல்லாமல் இருப்பதுமே ஆகும்’.
நாம் அனைவரும் காரியங்கள் மேம்பட விரும்புவோம். ஆனால் இந்த நேரத்தில் நீங்கள் இருக்கும் நிலை உங்களை கலங்க செய்ய வேண்டிய அவசியமில்லை. தேவன் கிரியை செய்கிறார் என்றும், காரியங்கள் மாற்றம் அடைகின்றன, ஏற்ற சமயத்தில் அதன் பலனை காண்பீர்கள் என்றும் நம்புவதை தெரிந்துகொள்ளலாம்.
நம் தெரிந்து கொள்ளுதலைப் பொறுத்ததே வாழ்க்கை. எனவே திருப்தியையும் மனநிறைவையும் உங்கள் வாழ்விலே ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ளுங்கள் அப்படி செய்யும்போது நீங்கள் தவறமாட்டீர்கள்.
ஜெபம்
தேவனே, நான் எங்கே இப்போது இருக்கிறேனோ அங்கே திருப்தியாகவும், மனநிறைவுடனும் இருக்க விரும்புகிறேன். ஒவ்வொரு நாளும் மனநிறைவுடன் இருப்பதை தெரிந்துகொள்ள பெலன் தந்தருளும்.